Homeசெய்திகள்சினிமா‘கருப்பு’ அப்டேட் கொடுத்த RJ பாலாஜி – புதிய பாடல் ரெடியாகிறது!

‘கருப்பு’ அப்டேட் கொடுத்த RJ பாலாஜி – புதிய பாடல் ரெடியாகிறது!

-

- Advertisement -

தமிழ் புத்தாண்டுக்குள் ”கருப்பு” படத்தின் அடுத்த பாடல் வரும் என LIK பட விழாவில் அப்டேட் கொடுத்த இயக்குநர் RJ பாலாஜி.‘கருப்பு’ அப்டேட் கொடுத்த RJ பாலாஜி – புதிய பாடல் ரெடியாகிறது!சென்னையில் நடைபெற்ற எல்.ஐ.கே (Love Insurance Company) திரைப்படத்தின் பிரீ-ரிலீஸ் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

இந்த விழாவில் அவர் தனது அடுத்த படமான கருப்பு குறித்து முக்கிய அப்டேட்டையும் பகிர்ந்தார். நடிகர் சூர்யா நடித்துள்ள இந்த படம் அவரது 45-வது திரைப்படமாகும். ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

we-r-hiring

மேலும், இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளதுடன், ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தில் திரிஷா, நட்டி, இந்திரன்ஸ், சுவாசிகா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

பல நாட்களாக தள்ளிப்போன இப்படத்தின் வெளியீடு, தற்போது வரும் மே 14ஆம் தேதி நடைபெறும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதுவரை வெளியான இரண்டு பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்த நிலையில், விழாவில் பேசிய ஆர்.ஜே. பாலாஜி, “கருப்பு திரைப்படம் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளது. தமிழ் புத்தாண்டுக்குள் அடுத்த பாடல் வெளியாகும்” என்று தெரிவித்தார். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இரண்டு குழந்தைகளுக்கு தாயான திரிஷா…சினிமாவிலிருந்து விலகப் போவதாக தகவல்…

MUST READ