Homeசெய்திகள்தமிழ்நாடுசாதிவாரி கணப்பெடுப்பு கொள்கை சார்ந்த விவகாரம் இதில் தலையிட முடியாது – நீதிமனறம் திட்டவட்டம்

சாதிவாரி கணப்பெடுப்பு கொள்கை சார்ந்த விவகாரம் இதில் தலையிட முடியாது – நீதிமனறம் திட்டவட்டம்

-

- Advertisement -

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது என்பது அரசின் கொள்கை சார்ந்த விவகாரம் (Policy Decision) என்பதால், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.சாதிவாரி கணப்பெடுப்பு கொள்கை சார்ந்த விவகாரம் இதில் தலையிட முடியாது – நீதிமனறம் திட்டவட்டம்

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் ஏற்கனவே பீகார் மாநிலத்தில் இந்த பணிகள் முடிந்திருப்பதாகவும் இவற்றை உடனடியாக தடுக்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

we-r-hiring

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை பார்த்த நீதிபதிகள், இந்த மனுவில் என்ன மாதிரியான மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது? என்ற கேள்வி எழுப்பினர்.

மேலும், மிகவும் மோசமான மற்றும் நாகரிகமற்ற சொற்கள் இதில் இடம் பெற்றுள்ள இத்தகைய மொழி நடையுடன் கூடிய மனுவை இந்த நீதிமன்றம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் கூறினர்.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,:-
அந்தச் சொற்களுக்காக மன்னிப்புக் கோரினார். ஆனால், மனுவின் தன்மையை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

சாதி வாரி கணக்கெடுப்பு என்பது கொள்கை முடிவு சார்ந்த விவகாரம் என்றும், இத்தகைய விவகாரங்களில் நீதிமன்றங்கள் உத்தரவிட முடியாது எனக்கூறி, சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரான மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு ஏன்? இடஒதுக்கீடு உச்சவரம்பு கூடுமா?

MUST READ