அமெரிக்காவின் கடற்படை வீரர்களின் தடைகளையும் மீறி, ஈரான் நாட்டுக்குச் சொந்தமான ஒரு பிரம்மாண்ட எண்ணெய் கப்பல் (Supertanker) ஹார்முஸ் ஜலசந்தியைத் தாண்டிச் சென்றிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


அமெரிக்கத் தடைகளை உடைத்த ஈரான் கப்பல்
ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஃபார்ஸ் (Fars News Agency) புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி, அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட ஈரானிய சூப்பர்டேங்கர் ஒன்று, அமெரிக்காவின் கடல்சார் முற்றுகையையும் மீறி ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) வெற்றிகரமாகக் கடந்துள்ளது. இந்தக் கப்பல் தற்போது ஈரானின் இமாம் கொமேனி துறைமுகத்தை (Imam Khomeini Port) நோக்கிப் பயணம் செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த கப்பல் ‘மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுமந்து செல்லும் கப்பல்’ (Very Large Crude Carrier – VLCC) வகையைச் சார்ந்தது. இது சுமார் 20 லட்சம் (2 மில்லியன்) பீப்பாய்கள் கச்சா எண்ணெயைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது.
ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. குறிப்பாக ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தவும், அதன் பொருளாதாரத்தை முடக்கவும் அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது. இத்தகைய சூழலில், அமெரிக்காவின் ‘பிளாக் ஏட்’ (Blockade) எனப்படும் கடல்வழித் தடையைத் தாண்டி இந்தக் கப்பல் பயணிப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் மிக முக்கியமான பாதையாக ஹார்முஸ் ஜலசந்தி கருதப்படுகிறது. இங்கு அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே அடிக்கடி மோதல் போக்கு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் எச்சரிக்கைகளையும் தடைகளையும் பொருட்படுத்தாமல், ஈரான் தனது மிகப்பெரிய எண்ணெய் கப்பலைத் தாயகம் கொண்டு வருவதன் மூலம், தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளது. இது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
ஈரான் – அமெரிக்கா போர்… ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய காணொளி மாநாடு நடத்த திட்டம்
