- Advertisement -
வடமாநிலங்களில் கொட்டித்தீர்க்கும் மழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு
டெல்லி, உத்திர பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருவதால் எங்கும் வெள்ளகாடாக காட்சி அளிக்கிறது.
சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு இடையே டெல்லி, உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. டெல்லியின் என்.சி.ஆர் மண்டல பகுதிகளான லாட்ஜ் பாத் நகர், லோத்தி சாலை, லிட்டியன்ஸ் டெல்லி, நொய்டா உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

விபத்தை தவிர்ப்பதற்காக வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல் உத்திர பிரதேசத்தின் மதுரா உள்ளிட்ட பல இடங்களில் பலத்த மழை பெய்தது.
குளம் போல தேங்கிய வெள்ளத்தில் பேருந்துகள் ஊர்ந்து சென்றன. உத்தராகண்டிலும் கனமழையுடன் பனிப்பொழிவு நிலவுவதால் கேதார்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதனுடைய வட மாநிலங்களில் மூன்று நாட்கள் கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.