Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஓஆர்எஸ் கரைச்சல் வழங்க வேண்டும் – சுகாதாரத்துறை உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஓஆர்எஸ் கரைச்சல் வழங்க வேண்டும் – சுகாதாரத்துறை உத்தரவு

-

- Advertisement -

அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய ஓஆர்எஸ் கரைச்சல் இருப்பில் வைக்க வேண்டும் என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஓஆர்எஸ் கரைச்சல் வழங்க வேண்டும் – சுகாதாரத்துறை உத்தரவுவெப்ப அலை காரணமாக மக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுக்க தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார நிலையங்கள், சென்னை மாநகராட்சி சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் ஓ.ஆர்.எஸ்.கரைசல் வழங்க தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த கரைசலை பொதுமக்கள் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக வாங்கிக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாய கூலி தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகளுக்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்கவும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பொது மருத்துவமனைகள், மாவட்டம் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் (HEAT STOKE) என்ற சிறப்பு வார்டு அமைக்கவும் தமிழக பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

we-r-hiring

வெப்ப அலையினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டுக்குள் விமான பயண கட்டணம் தாறுமாறாக உயர்ந்தது!

MUST READ