spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டு"நாங்கள் பேட்டிங்கை நேர்த்தியாக விளையாட முயற்சித்தோம், ஆனால்...."- டேவிட் வார்னர் பேட்டி!

“நாங்கள் பேட்டிங்கை நேர்த்தியாக விளையாட முயற்சித்தோம், ஆனால்….”- டேவிட் வார்னர் பேட்டி!

-

- Advertisement -

 

Photo: Indian Premier League

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான 44 லீக் போட்டி, குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (மே 02) இரவு 07.30 மணியளவில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ரன்களை எடுத்தது.

we-r-hiring

அதைத் தொடர்ந்து, 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 125 ரன்களை எடுத்துள்ளது. இதனால் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

டெல்லி அணி தரப்பில் அதிகபட்சமாக அமன் ஹக்கிம் கான் 51 ரன்களையும், அக்சர் படேல் 27 ரன்களையும், ரிபால் படேல் 23 ரன்களையும் எடுத்துள்ளனர். அதேபோல் குஜராத் அணி தரப்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 59 ரன்களையும், அபிநவ் மனோகர் 26 ரன்களையும், ராகுல் திவாதியா 20 ரன்களையும் எடுத்துள்ளனர்.

Photo: Indian Premier League

குஜராத் அணியில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், ரஷீத் கான் 1 விக்கெட்டையும், மோஹித் சர்மா 2 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர். டெல்லி அணியில் கலீல் அகமது, இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 1 விக்கெட்டையும் எடுத்துள்ளனர்.

போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர், “எங்கள் பந்து வீச்சாளர்கள் அற்புதமாக விளையாடினார்கள்; எங்கள் பேட்டிங்கில் என்ன சிக்கல் என தெரியவில்லை; நாங்கள் பேட்டிங்கை நேர்த்தியாக விளையாட முயற்சித்தோம், ஆனால் முடியவில்லை. தெவாடியா அவுட் ஆகும் போது நான் பதட்டமாக இருந்தேன்; ஆனால் இஷாந்த் சர்மாவின் விக்கெட்டுகளை கைப்பற்றுவதில் அவர் உறுதியாக இருந்தார்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ