கொடைக்கானலில் உள்ள பழங்கால மற்றும் அரிதான கார்களை கண்டு ரசித்து அவற்றுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
கொடைக்கானலில் உள்ள தனியார் அருங்காட்சியத்திற்கு அழைப்பின் பேரில் வந்த தமிழக முதல்வர் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பழமையான மற்றும் அரிதான கார்கள், பைக் சேகரிப்புகளை கண்டு ரசித்தார்.
சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில், கொடைக்கானலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய குடும்பத்தினருடன் கொடைக்கானலில் உள்ள தனியார் விடுதியில் தங்கி உள்ள நிலையில், இன்று காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட பிறகு திடீரென்று அழைப்பின் பேரில் கொடைக்கானல் கலையரங்கம் பகுதியில் உள்ள தனியார் அருங்காட்சியகத்திற்கு திடீர் விசிட் கொடுத்தார்.

அப்போது தனியார் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பழமையான மற்றும் அரிதான கார்களான பல ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட rolls-royce அம்பாசிட்டரின் பழைய மாடல் உள்ளிட்ட கார்களும் அதே அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பழைய வகையான புல்லட் பைக்குகள் மற்றும் ரேடியோ சேகரிப்புகள் ஹார்லிக்ஸ் போன்ற பழமையான உணவு வகைகள் உள்ளிட்ட அனைத்தையும் அருங்காட்சியகத்தில் பார்த்து ரசித்த முதல்வர் விண்டேஜ் அருங்காட்சியகத்தில் புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ந்தார்.
மேலும் இந்த அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்கள் எவ்வாறு சேகரிக்கப்பட்டது சேகரிப்புகளை எப்படி பத்திரமாக வைத்துள்ளீர்கள் என்று அருங்காட்சியகத்தில் உள்ள பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.
”ஸ்டாலின் தொடரட்டும்” பாடிய சிறுமி – மீண்டும் பாடச் சொல்லிய முதல்வர்
