Homeசெய்திகள்தமிழ்நாடுதிராவிட மாடல் தனித்துவமான மாடல்! -  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பெருமிதம்

திராவிட மாடல் தனித்துவமான மாடல்! –  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பெருமிதம்

-

- Advertisement -

தமிழ்நாடு என்றாலே சாதனை! திராவிட மாடல் தனித்துவான மாடல் என்றும் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமித்துடன் தெரிவித்துள்ளாா்.திராவிட மாடல் தனித்துவமான மாடல்! -  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பெருமிதம்திமுக ஆட்சியில் தமிழ்நாடு இரட்டை இலக்க வளர்ச்சி என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வலைதள பதிவில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு என்றாலே சாதனை தான் என குறிப்பிட்டுள்ளாா். முதல் மூன்றாண்டுகளில் அடித்தளம் அமைத்து, இப்போது தொடர்ந்து இரண்டாண்டுகளாக இரட்டை இலக்க வளர்ச்சி என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளோம். சொன்னதை, எண்களிலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம். இந்த வெற்றிக்கு துணை நின்ற சிறப்பான நமது நிர்வாகத்திற்கும், உழைப்பால் துணை நின்ற தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. இது தொடக்கம்தான். உங்கள் துணையோடு இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி என்றாா். “நம்முடைய போட்டி என்பது மற்ற இந்திய மாநிலங்களுடன் அல்ல; தெற்காசியாவில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு உயர வேண்டும்!” எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

கொடைக்கானல்: விண்டேஜ் அருங்காட்சியகத்தில் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்த முதல்வர்

we-r-hiring

MUST READ