Homeசெய்திகள்மாவட்டம்உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக தமிழில் தீர்ப்பு!

உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக தமிழில் தீர்ப்பு!

-

- Advertisement -

சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக வழக்கில் உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாகத் முதல்முறையாக தமிழில் தீர்ப்பு வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக தமிழில் தீர்ப்பு!

we-r-hiring

ஏப்ரல் 28, 2026 அன்று, நீதித்துறை வரலாற்றில் முக்கியமான முன்னேற்றமாக மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் தமிழில் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நீதிபதி பரதசக்கரவர்த்தி, வழங்கிய இந்த தீர்ப்பு, ஆங்கிலத்துடன் தமிழிலும் வெளியிடப்பட்டதன் மூலம் புதிய முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

இந்த வழக்கு, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளின் போது, வேத மந்திரங்களுடன் இணைந்து தமிழிலும் மந்திரங்கள் பயன்படுத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்டதாகும். வழக்கை விசாரித்த நீதிபதி, தீர்ப்பை இருமொழிகளில் வெளியிட்டு, உயர் நீதிமன்றங்களில் தமிழை அலுவல் மொழியாக கொண்டு வர வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கைக்கு முக்கிய முன்னேற்றத்தை உருவாக்கியுள்ளார்.

பொதுவாக, உயர்நீதிமன்ற தீர்ப்புகள் அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியாகும் நிலையில், தமிழில் நேரடியாக தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது நீதித்துறையில் மொழி பயன்பாட்டை விரிவுபடுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. இது, பொதுமக்களுக்கு தீர்ப்புகளை எளிதாக புரிந்து கொள்ளும் வாய்ப்பையும் ஏற்படுத்துகிறது.

இதற்கு முன்பு, சரவண பவன் ராஜகோபால் வழக்கு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு 2019 ஜூலை மாதத்தில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால், உயர்நீதிமன்ற மட்டத்தில் நேரடியாக தமிழில் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.

திருச்சி பட்டாம்பூச்சி பூங்கா – ஏப்ரல், மே முழுவதும் பார்வையாளர்களுக்கு அனுமதி…

MUST READ