தவெக இன்னும் ஆட்சி பொறுப்பை ஏற்கும் முன்பே குதிரை பேரம் செய்ய தொடங்கிவிட்டது. தமிழக அரசியலில் மாற்றம் கொண்டு வரபோகிறொம் என்று தமிழக வெற்றிக் கழகம் சொன்னது இதுதானா? என திமுக எம்.பி.வில்சன் கேள்வி எழுப்பியுள்ளாா்.
தமிழக அரசியலில் மாற்றத்தை கொண்டு வருவோம் என்று கூறி வந்த தமிழக வெற்றிக் கழகம் தற்போது குதிரைப் பேர அரசியலில் ஈடுபடுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அமமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் காமராஜை தவெக தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்கிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து திமுக எம்.பி. வில்சனும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்ட வில்சன், தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக காணப்படாத வகையில் மீண்டும் குதிரைப் பேர முயற்சிகள் நடைபெறத் தொடங்கியுள்ளதாக கூறியுள்ளார். அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதாக கூறியவர்கள் தற்போது அதே பழைய அரசியல் நடைமுறைகளையே பின்பற்றுகிறார்களா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இன்னும் ஆட்சிப் பொறுப்பையே ஏற்காத நிலையில் தவெக தரப்பு குதிரைப் பேர அரசியலில் ஈடுபடத் தொடங்கிவிட்டதாகவும் வில்சன் குற்றம்சாட்டியுள்ளார். இதன் மூலம் “மாற்றம்” என்ற பெயரில் பழைய அரசியல் கலாச்சாரமே தொடரப்படுகிறதா என்ற விவாதம் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. முன்னதாக, அமமுக எம்.எல்.ஏ.காமராஜை தவெக தங்கள் அணிக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருவதாக டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார். இந்த குற்றச்சாட்டு தற்போது தமிழக அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் ஆட்சி அமைக்க கம்யூனிஸ்ட், விசிக ஆதரவு கடிதம் வழங்கியது
