spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா"சரத்பாபு இன்னும் உயிரோட தான் இருக்காரு, வதந்தி பரப்பாதீங்க"... மன்றாடி கேட்ட சரத்குமார்!

“சரத்பாபு இன்னும் உயிரோட தான் இருக்காரு, வதந்தி பரப்பாதீங்க”… மன்றாடி கேட்ட சரத்குமார்!

-

- Advertisement -

நடிகர் சரத் பாபு இறந்ததாக வெளியான செய்திகள் வதந்தி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. .

இன்று காலை தமிழக மக்களுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி செய்தியாக நடிகர் மனோபாலா காலமானார். .

we-r-hiring

இந்நிலையில் அதையடுத்து ஒரு அதிர்ச்சி தகவலாக நடிகர் சரத் பாபு உடல்நலக்குறைவால் காலமாகிவிட்டார் என்று செய்திகள் வெளியாகின. இதைக் கேட்டு மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஆனால் இந்த செய்தி முற்றிலும் வதந்தி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சரத் பாபுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் குணமடைவார் என்றும் கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களாகவே  சரத் பாபு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறார். கடந்த ஏப்ரல் 20ம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Sepsis என்ற நோயின் காரணமாக அவரின் கிட்னி, நுரையீரல் மற்றும் கல்லீரல் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  Sepsis என்ற நோய் என்பது ரத்தத்தில் நச்சு பொருளாய் கலந்து அது உடலின் பல்வேறு உறுப்புகளை பாதிக்கும்

கடந்த சில வருடங்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் திடீரென அவர் மறைந்துவிட்டதாக வெளியான செய்திகள் தீயாய் பரவி வருகின்றன. “சரத்பாபு இன்னும் உயிரோட தான் இருக்காரு, வதந்தி பரப்பாதீங்க. அவர் சீக்கிரம் குணமாகி வர பிரார்த்திப்போம்” என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.

MUST READ