Homeசெய்திகள்தமிழ்நாடுபெட்ரோல், டீசல் விலை உயா்வால் புயலில் சிக்கிய படகு போலக் குடும்பங்கள் தள்ளாடும் நிலை ஏற்படும்...

பெட்ரோல், டீசல் விலை உயா்வால் புயலில் சிக்கிய படகு போலக் குடும்பங்கள் தள்ளாடும் நிலை ஏற்படும் – பெ.சண்முகம்

-

- Advertisement -

ஒன்றிய பாஜக அரசால் நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயா்வால் புயலில் சிக்கிய படகு போலக் குடும்பங்கள் தள்ளாடும் நிலை ஏற்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளா் பெ.சண்முகம் கூறியுள்ளாா்.பெட்ரோல், டீசல் விலை உயா்வால் புயலில் சிக்கிய படகு போலக் குடும்பங்கள் தள்ளாடும் நிலை ஏற்படும் - பெ.சண்முகம்இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளா் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒன்றிய பாஜக அரசால் நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் சங்கிலித் தொடர் போன்ற பாதிப்புகளை உருவாக்கும்.

இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரும். புயலில் சிக்கிய படகு போலக் குடும்பங்கள் தள்ளாடும் நிலை ஏற்படும். எனவே, மத்திய அரசு பெட்ரோல், டீசலுக்கு மானியம் வழங்கி, இந்த விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம் என்று அக்கட்சியின் மாநிலசெயலாளா் கூறியுள்ளாா்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் உடனே திரும்பப் பெற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

we-r-hiring

MUST READ