சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள டெக் மகிந்திரா ஐடி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து எற்பட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கு பணிபுரிந்து வரும் நிலையில் இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


டெக் மகிந்திரா நிறுவனத்தின் சென்னை காரப்பாக்கம் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பழைய மகாபலிபுரம் சாலை பகுதியில் அமைந்துள்ள இந்த நிறுவன வளாகத்தில், மின்னணு மற்றும் பழைய சாதனங்கள் வைக்கப்பட்டிருந்த குடோனில் திடீரென தீப்பற்றியது.
முதற்கட்ட தகவலின்படி, மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தீ பரவத் தொடங்கியவுடன் வளாகம் முழுவதும் எச்சரிக்கை மணிகள் ஒலிக்கப்பட்டதால், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் உடனடியாக மாற்று வழிகள் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
தகவல் அறிந்ததும் சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், திருவான்மியூர், மேடவாக்கம் மற்றும் கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சம்பவ இடத்துக்கு வந்தன. தீயணைப்பு வீரர்கள் சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலாக போராடி தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததுடன், ஓஎம்ஆர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருப்பினும், தீயணைப்பு துறையினரின் துரிதமான நடவடிக்கையால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
‘சூப்பர் எல் நினோ’எச்சரிக்கை: தமிழகத்திற்கு காத்திருக்கும் இரட்டை ஆபத்து – வானிலை ஆய்வு மையம் தகவல்
