Homeசெய்திகள்தமிழ்நாடு“தமிழக வெற்றி கழக அரசை லாட்டரி மார்ட்டின் கும்பல்தான் வழிநடத்துகிறது” – அனிதா ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

“தமிழக வெற்றி கழக அரசை லாட்டரி மார்ட்டின் கும்பல்தான் வழிநடத்துகிறது” – அனிதா ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

-

- Advertisement -

திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், “தமிழக வெற்றி கழக (தவெக) அரசை லாட்டரி மார்ட்டின் கும்பல் தான் வழிநடத்துகிறது” என்றும், “முதல்வராக ஆதவ் அர்ஜுனா செயல்படுகிறார், விஜய் வெறும் பொம்மை முதல்வராக உள்ளார்” என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.“தமிழக வெற்றி கழக அரசை லாட்டரி மார்ட்டின் கும்பல்தான் வழிநடத்துகிறது” – அனிதா ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக வெற்றி கழக அரசை கடுமையாக விமர்சித்தார். மேலும், அமலாக்கத்துறை விசாரணை தன்னை எந்த வகையிலும் நெருக்கவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.

we-r-hiring

தூத்துக்குடி திமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தின் அடிப்படையில், திமுக ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் தெருமுனை கூட்டங்கள் மற்றும் சமூக வலைதள பிரச்சாரங்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை மோசமடைந்துள்ளதாக குற்றம்சாட்டிய அவர், கோவை உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்ற குற்றச் சம்பவங்களை சுட்டிக்காட்டினார். மாநிலம் முழுவதும் லாட்டரி சீட்டு விற்பனை மற்றும் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாகவும், அரசு இதை கட்டுப்படுத்த தவறிவிட்டதாகவும் விமர்சித்தார்.“தமிழக வெற்றி கழக அரசை லாட்டரி மார்ட்டின் கும்பல்தான் வழிநடத்துகிறது” – அனிதா ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

தமிழக வெற்றி கழகத்தின் செயல்பாடுகள் குறித்து பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், “கட்சித் தலைவரை விட ஆதவ் அர்ஜுனாதான் கட்சியை வழிநடத்துகிறார் என்று அக்கட்சியினரே பேசிக்கொள்கிறார்கள்” எனக் கூறினார். மேலும், “லாட்டரி மார்ட்டின் பணம் தமிழக அரசியலில் ஆதிக்கம் செலுத்துகிறது என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது” என்றும் குற்றம்சாட்டினார்.

தமிழக முதல்வர் விஜய் “பொம்மை முதல்வராக” செயல்படுகிறார் என விமர்சித்த அவர், அரசின் அறிக்கைகள் கூட வேறு நபர்களின் மூலம் வெளியாகின்றன என்று குற்றஞ்சாட்டினார். தமிழகத்தில் மீண்டும் லாட்டரி விற்பனை வரக்கூடும் என்ற அச்சம் மக்களிடையே உருவாகியுள்ளது என்றும் தெரிவித்தார். திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆன்லைன் ரூ.100 தரிசன டிக்கெட் முறையில் மோசடி நடந்ததாக குற்றம்சாட்டிய அவர், இதுகுறித்து கோவில் நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் மீது முழுமையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கன்னியாகுமரியில் கேரளாவிற்கு கனிம வளங்கள் ஏற்றிச் செல்லும் லாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதை குறிப்பிட்ட அவர், இதனால் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். கனிம வள போக்குவரத்துக்கு அரசு உரிய அனுமதி வழங்கி சிக்கலை தீர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், “தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அரசு தூங்கிக்கொண்டிருக்கிறதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது” என அவர் விமர்சித்தார்.

“தமிழக வெற்றி கழக அரசை லாட்டரி மார்ட்டின் கும்பல்தான் வழிநடத்துகிறது” – அனிதா ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாகவும் அரசை சாடிய அவர், பெண்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி, மீனவர்களுக்கு அறிவிக்கப்பட்ட தொகை உள்ளிட்ட பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றார். அமலாக்கத்துறை விசாரணை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “என்னுடைய வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அமலாக்கத்துறை என்னை எந்த வகையிலும் நெருக்கவில்லை” என்று தெரிவித்தார்.

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து பேசுகையில், கட்சி தலைவர் யாரை வேட்பாளராக அறிவித்தாலும் அவரை வெற்றி பெறச் செய்வோம் என்றும், 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இறுதியாக, தமிழக வெற்றி கழக அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இணைந்திருப்பதற்கு வாழ்த்து தெரிவித்த அவர், புதிய மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்தின் செயல்பாடு சிறப்பாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அம்பேத்கரிய இயக்கம் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது நூற்றாண்டு கால வரலாற்றுத் தருணம் – திருமாவளவன் நெகிழ்ச்சி…

MUST READ