என்.எல்.சி. நிறுவனத்திற்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். நெய்வேலி பகுதியில் என்.எல்.சி. நிர்வாகம் மேற்கொண்டு வரும் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு எந்தவித ஒத்துழைப்பும் வழங்கக்கூடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
நெய்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் என்.எல்.சி. சுரங்கப் பணிகளால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் விளைவாக ஆயிரக்கணக்கான மக்கள் சிறுநீரக நோய்களால் அவதிப்பட்டு தினமும் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும் வேல்முருகன் குற்றம்சாட்டினார். பொதுமக்களின் உடல்நல பாதிப்புகளை அரசே ஏற்கும் நிலையில், மேலும் விவசாய நிலங்களை கையகப்படுத்துவது மக்களின் வாழ்வாதாரத்தையும் உடல்நலத்தையும் அழிக்கும் செயலாகும் என அவர் கண்டனம் தெரிவித்தார்.

மேலும், மக்கள் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் என்.எல்.சி. நிர்வாகம் தொடர்ந்து நிலம் கையகப்படுத்த முயற்சிப்பது ஏற்க முடியாதது என்றும், விவசாயிகளின் உரிமைகளையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நிலம் கையகப்படுத்தும் திட்டங்களை அரசு மறுபரிசீலனை செய்து, பாதிக்கப்பட்ட மக்களின் நலனை முன்னிலைப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேகதாது அனை விவகாரம் -சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் விஜய் அவரச ஆலோசனை
