- Advertisement -
காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஸ்துவாரில் 3 மூத்த அதிகாரிகள் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி நொறுங்கியது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஸ்துவார் அருகே ராணுவ ஹெச்.ஏ.எல் துருவ் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த விமானிகள் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் பாதுகாப்பாக உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் பாகங்கள் கிஸ்துவார் மாவட்டத்தில் மார்வா- தச்சான் என்ற இடத்தில் ஓடும் மருசுதார் ஆற்றில், விபத்தை தொடர்ந்து அடித்து செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

முன்னதாக அருணாச்சலப் பிரதேசத்தின் போம்டிலா அருகே பறந்து கொண்டிருந்த இராணுவ ஏவியேஷன் சீட்டா ஹெலிகாப்டர், ஏடிசி உடனான தொடர்பை இழந்த பின்னர் மார்ச் 16 அன்று விபத்துக்குள்ளானது குறிப்பிடதக்கது.