Homeசெய்திகள்தமிழ்நாடு”நயினார் நாகேந்திரனுக்கு  ‘ரெட் சிக்னல்’...தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார்?

”நயினார் நாகேந்திரனுக்கு  ‘ரெட் சிக்னல்’…தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார்?

-

- Advertisement -

2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக பாஜகவில் முக்கிய அரசியல் மாற்றங்கள் நிகழக்கூடும் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை பெறத் தவறிய நிலையில், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகள் குறித்து கட்சிக்குள் அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, தமிழக பாஜகவின் அமைப்பு செயல்பாடுகள் மற்றும் தலைமை குறித்தும் தேசிய தலைமை தீவிர மறுஆய்வு மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.”நயினார் நாகேந்திரனுக்கு  ‘ரெட் சிக்னல்’...தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார்?

தமிழக பாஜக ஏற்கனவே எல். முருகன், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் என தொடர்ச்சியான தலைமை மாற்றங்களை சந்தித்துள்ளது. இந்நிலையில், மீண்டும் புதிய தலைவரை நியமிக்குமா அல்லது தற்போதைய தலைமையையே தொடருமா என்பது குறித்து கட்சிக்குள் தீவிர விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

we-r-hiring

2026 தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்ற பாஜக, 27 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த முடிவு தொடர்பாக மாநில தலைமையின் செயல்பாடுகள் குறித்து தேசிய தலைமை அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சூழலில், டெல்லியில் நடைபெற்ற மையக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைமை மாற்றம் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. புதிய தலைமையை முன்னிறுத்தும் முடிவு எடுக்கப்பட்டால், அதற்கு கட்சி நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக, நயினார் நாகேந்திரனுக்கு பதிலாக யார் மாநில தலைவராக வரலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கட்சி வட்டாரங்களில் அஸ்வத்தாமன், ராம் சீனிவாசன் மற்றும் வினோஜ் பி. செல்வம் ஆகியோரின் பெயர்கள் முக்கியமாக பேசப்படுகின்றன. இருப்பினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

மறுபுறம், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலகி ‘We The Leader’ என்ற மக்கள் இயக்கத்தை தொடங்கியுள்ளார். இந்த இயக்கத்தில் ஏற்கனவே 17 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. அண்ணாமலையின் புதிய அரசியல் பயணம் மற்றும் தமிழக பாஜகவின் தற்போதைய நிலை ஆகியவை கட்சியின் எதிர்கால திசை குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளன.

தமிழகத்தில் பாஜக வளர்ச்சியை வலுப்படுத்துவது, அமைப்பு ரீதியான மாற்றங்களை மேற்கொள்வது மற்றும் எதிர்கால தேர்தல்களுக்கான வியூகங்களை வகுப்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து தேசிய தலைமை தீவிரமாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழக பாஜகவில் விரைவில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு சாதனைகளுக்கு ‘ஸ்டிக்கர்’ ஒட்டிய சோஃபா மாடல் அரசு – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

MUST READ