அ.தி.மு.க.வில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரின் முடிவை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், அ.தி.மு.க. தனக்கு அடையாளம், பதவி மற்றும் அரசியல் வாய்ப்புகளை வழங்கிய நிலையில், கட்சி சவால்களை எதிர்கொள்ளும் நேரத்தில் விலகுவது தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறினார். மேலும், கட்சியின் ஆதரவால் அரசியல் வளர்ச்சியும் செல்வாக்கும் பெற்ற பிறகு தலைமையை விமர்சித்து விலகுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இதுபோன்ற நடவடிக்கைகள் கட்சித் தொண்டர்களின் உணர்வுகளை பாதிக்கும் என்றும் தெரிவித்தார்.

கட்சித் தலைமையை விமர்சிப்பவர்கள், கடந்த காலத்தில் தலைமையுடன் இணைந்து செயல்பட்டதையும் மறக்கக் கூடாது எனக் குறிப்பிட்ட அவர், தேர்தலுக்குப் பிறகு வேறு கட்சியில் இணைவதை விட தேர்தலுக்கு முன்பே தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளாா். அ.தி.மு.க.வின் பலம் அடிமட்டத் தொண்டர்கள்தான் என்றும், அவர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும்தான் கட்சியை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது என்றும் ஆர்.பி. உதயகுமார் கூறினார். மேலும், இதுபோன்ற கட்சி மாறும் நடவடிக்கைகள் எதிர்காலத்தில் தொடர்ந்தால், அதனை தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வைக்கோவின் அடுத்த அரசியல் முடிவ என்ன? பரபரப்பை கிளப்பிய முதல்வர் சந்திப்பு…
