Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்...

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்…

-

- Advertisement -

தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது.தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்...

தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், புதிய அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. சட்டப்பேரவைக்கு வருகை தந்த ஆளுநர் அர்லோக்கருக்கு, கோட்டை வளாகத்தின் இரண்டாவது நுழைவாயில் அருகே போலீஸ் இசைக்குழுவின் மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. சபாநாயகர் மற்றும் சட்டப்பேரவை செயலாளர் பூங்கொத்து வழங்கி ஆளுநரை வரவேற்றனர்.

we-r-hiring

இதனைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு கூட்டத்தொடர் தொடங்கியது. பின்னர் ஆளுநர் அர்லோக்கர் தனது உரையை ஆற்றத் தொடங்கினார். புதிய அரசின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் எதிர்கால வளர்ச்சி நோக்கங்கள் குறித்து அவரது உரையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர்கள் தவெக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புப் பட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தனர். மேலும், சட்டப்பேரவை வளாகம் முன்பு பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

விஜயபாஸ்கர் அ.தி.மு.க. மூலம் பெற்ற அரசியல் வளர்ச்சியை மறந்துவிட்டாரா? – ஆர்.பி. உதயகுமார் விமர்சனம்

MUST READ