Homeசெய்திகள்உலகம்அலி கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு ஈரான் அழைப்பு

அலி கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு ஈரான் அழைப்பு

-

- Advertisement -

ஈரானின் மறைந்த உச்சத் தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க வருமாறு பிரதமர் மொடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் முறைப்படி அழைப்பு விடுத்துள்ளாா்.அலி கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு ஈரான் அழைப்பு

ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அலி கமேனியின் அவர்களின் இறுதிச் சடங்கில் பங்கேற்குமாறு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் சார்பில் இந்திய அரசுக்கு முறையாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான பாரம்பரிய நட்புறவு மற்றும் தூதரக உறவுகளின் அடிப்படையில் இந்த அழைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

we-r-hiring

கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்த தாக்குதலில் அலி கமேனி உயிரிழந்ததாக ஈரான் அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து, அவரது இறுதிச் சடங்கு மற்றும் அடக்க நிகழ்வுகள் ஜூலை 4 முதல் ஜூலை 9 வரை நடைபெறும் என ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தெஹ்ரானில் தொடங்கும் அஞ்சலி மற்றும் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் பின்னர் கும் மற்றும் மஷ்ஹத் நகரங்களில் நடைபெறவுள்ளன. ஜூலை 9-ஆம் தேதி அலி கமேனியின் சொந்த ஊரான மஷ்ஹத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. இந்த இறுதிச் சடங்கில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் உயர்மட்ட பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரானின் அரசியல் வரலாற்றில் முக்கியமான தலைவராக கருதப்படும் அலி கமேனியின் மறைவு, மத்திய கிழக்கு அரசியலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது இறுதிச் சடங்கு சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

Super El Nino தொடங்கியதற்கான அறிகுறிகள்.. விஞ்ஞானிகள் எச்சரிக்கை

MUST READ