நடப்பு ஜூலை (2026) மாதத்தில் தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பான மழைப்பொழிவு பதிவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
சென்னை பிராந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள மாதாந்திர மழைப்பொழிவு முன்னறிவிப்பின் முக்கிய விவரங்கள் வருமாறு,

மேற்கு மாவட்டங்களில் கூடுதல் மழை
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இயல்பான (Normal) மழையே பெய்யக்கூடும் என்றாலும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்கு மாவட்டங்களில் இந்த மாதம் இயல்பை விட அதிகமான (Above Normal) மழை பதிவாக வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் இயல்பை விடக் குறைவான மழை பதிவாகலாம்.
விவசாயத்திற்குச் சாதகமான சூழல்
இந்த மழைப்பொழிவு முன்னறிவிப்பானது வேளாண்மை, நீர்வள மேலாண்மை மற்றும் தமிழக நீர்த்தேக்கங்களுக்கான நீர்வரத்து ஆகியவற்றிற்குப் பொதுவாகச் சாதகமான சூழலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திடீரெனக் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவுரை
விவசாயிகள், நீர்வள மேலாளர்கள், பேரிடர் மேலாண்மை அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் தங்களது அன்றாடத் திட்டமிடல்களுக்கு, ஐஎம்டி (IMD) வழங்கும் மாவட்ட வாரியான தினசரி முன்னறிவிப்புகள் மற்றும் வேளாண் வானிலை எச்சரிக்கைகளைத் தொடர்ந்து கண்காணித்துச் செயல்படுமாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்
