VPN நிறுவனங்களுக்கு கடுமையான ஒழுங்குமுறை விதிகளை கொண்டு வர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
அரசால் தடை செய்யப்பட்ட இணையதளங்கள் மற்றும் செயலிகளை VPN (Virtual Private Network) சேவைகள் மூலம் அணுகுவதைத் தடுக்கும் நோக்கில், VPN நிறுவனங்களுக்கு புதிய ஒழுங்குமுறை விதிகளை அமல்படுத்த ஒன்றிய அரசு பரிசீலித்து வருகிறது. அதன்படி, இந்தியாவில் சேவை வழங்கும் VPN நிறுவனங்கள் கட்டாயமாக நாட்டிற்குள் அலுவலகம் அமைத்து, அதிகாரப்பூர்வ பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், அரசின் சட்டப்பூர்வ உத்தரவுகளை பின்பற்றத் தவறும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், தேவையெனில் இந்தியாவில் பணிபுரியும் உள்ளூர் ஊழியர்களுக்கு சிறைத்தண்டனை உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

