Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்ஜூன் 2026 கார் விற்பனை:யார் முதலிடம்? டாப் 5 நிறவனங்கள் வெளியீடு…

ஜூன் 2026 கார் விற்பனை:யார் முதலிடம்? டாப் 5 நிறவனங்கள் வெளியீடு…

-

- Advertisement -

இந்திய கார் சந்தையின் ஜூன் 2026 விற்பனை புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. இதில், மாருதி சுசுகி தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துள்ள நிலையில், டாடா மோட்டார்ஸ் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.ஜூன் 2026 கார் விற்பனை:யார் முதலிடம்? டாப் 5 நிறவனங்கள் வெளியீடு…

டாப் 5 கார் நிறுவனங்களின் முழு விற்பனை விவரங்கள் இதோ…
ஜூன் 2026-ஆம் மாதத்திற்கான இந்திய பயணிகள் கார் விற்பனை புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. இதில், 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் விற்பனையாகி, இந்திய ஆட்டோமொபைல் சந்தை வலுவான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் சுமார் 3.21 லட்சம் வாகனங்கள் மட்டுமே விற்பனையான நிலையில், இந்த ஆண்டு விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக எஸ்யூவி, சிஎன்ஜி மற்றும் மின்சார வாகனங்களுக்கு வாடிக்கையாளர்களின் வரவேற்பு அதிகரித்திருப்பது இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

we-r-hiring

விற்பனை பட்டியலில், மாருதி சுசுகி மீண்டும் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது. ஜூன் மாதத்தில் மட்டும் 1,47,187 வாகனங்களை விற்பனை செய்த நிறுவனம், கடந்த ஆண்டைவிட சுமார் 45 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. நிறுவனத்தின் மொத்த விற்பனையில் சிஎன்ஜி வாகனங்கள் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளதுடன், புதிய இ-விட்டாரா மின்சார எஸ்யூவிக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஜூன் 2026 கார் விற்பனை:யார் முதலிடம்? டாப் 5 நிறவனங்கள் வெளியீடு…

இரண்டாவது இடத்தில் உள்ள டாடா மோட்டார்ஸ், ஜூன் மாதத்தில் 62 ஆயிரம் பயணிகள் வாகனங்களை விற்பனை செய்து, 67.39 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. இதில், 14,800 மின்சார கார்கள் விற்பனையானது, மின்சார வாகனப் பிரிவில் நிறுவனத்தின் முன்னிலை தொடர்வதை காட்டுகிறது. மூன்றாவது இடத்தை மஹிந்திரா & மஹிந்திரா பிடித்துள்ளது. குறிப்பாக அதன் எஸ்யூவி மாடல்களுக்கு நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் தொடர்ந்து அதிக தேவை நிலவுவதால், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது விற்பனை 27 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.ஜூன் 2026 கார் விற்பனை:யார் முதலிடம்? டாப் 5 நிறவனங்கள் வெளியீடு…

இதற்கிடையில், ஹூண்டாய் மோட்டார் இந்தியா மட்டும் விற்பனையில் சரிவை சந்தித்துள்ளது. ஜூன் மாதத்தில் 39,635 வாகனங்கள் விற்பனையான நிலையில், உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் சுமார் 14 ஆயிரம் வாகனங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டதே இதற்கு முக்கிய காரணம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. முதல் ஐந்து நிறுவனங்களின் பட்டியலில் டொயோட்டாவும் இடம்பிடித்துள்ளது. 28 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்துள்ள அந்த நிறுவனம், குறிப்பாக எஸ்யூவி மாடல்களுக்கு கிடைத்த வரவேற்பால் தனது விற்பனையை மேலும் அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக, ஜூன் 2026 விற்பனை புள்ளிவிவரங்கள், இந்திய கார் சந்தையில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதையும், சிஎன்ஜி மற்றும் மின்சார வாகனங்களுக்கான தேவை வேகமாக உயர்ந்து வருவதையும் வெளிப்படுத்துகின்றன.

EcoSport வாகன உரிமையாளர்கள் கவனத்திற்கு – E20 பெட்ரோல் பயன்பாடு குறித்து Ford India எச்சரிக்கை!

MUST READ