Homeசெய்திகள்மாவட்டம்சத்துணவு திட்டத்திற்கு 45 கிராமிற்கு மேல் உள்ள முட்டைகள் மட்டுமே சப்ளை: NECC தலைவர் சிங்கராஜ்...

சத்துணவு திட்டத்திற்கு 45 கிராமிற்கு மேல் உள்ள முட்டைகள் மட்டுமே சப்ளை: NECC தலைவர் சிங்கராஜ் தகவல்!

-

- Advertisement -

தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு, அரசு நிர்ணயித்துள்ள எடையளவான 45 கிராம் மற்றும் அதற்கு மேல் எடையுள்ள தரமான முட்டைகள் மட்டுமே சப்ளை செய்யப்படுகின்றன என்று தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (NECC) மண்டல தலைவரும், தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவருமான திரு. சிங்கராஜ் தெரிவித்துள்ளார்.சத்துணவு திட்டத்திற்கு 45 கிராமிற்கு மேல் உள்ள முட்டைகள் மட்டுமே சப்ளை: NECC தலைவர் சிங்கராஜ் தகவல்!

​நாமக்கல்லில் இன்று நடைபெற்ற முட்டை உற்பத்தி அதிகரிப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டத்திற்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பல்வேறு முக்கிய விபரங்களைப் பகிர்ந்துகொண்டார். ​செய்தியாளர்கள் சந்திப்பில் திரு. சிங்கராஜ் பேசியதாவது, ​”தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு தினமும் 55 லட்சம் முட்டைகள் சப்ளை செய்யப்பட்டு வருகின்றன. இதில் எடை குறைவான முட்டைகள் வழங்கப்படுவதாகச் சிலர் கூறும் புகார்களில் உண்மையில்லை. ஒப்பந்த விதிகளின்படி, 45 கிராமிற்கு மேல் எடையுள்ள முட்டைகளை மட்டுமே வழங்கி வருகிறோம். ஒருவேளை ஏதேனும் முட்டைகள் சேதமடைந்திருப்பதாகத் தகவல் வந்தால், அவை உடனடியாக மாற்றிக் கொடுக்கப்படுகின்றன.”

we-r-hiring

​ஈரான் போர் சூழலால் சரிந்த முட்டை ஏற்றுமதி
​ஈரானில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக, நாமக்கல் மண்டலத்திலிருந்து வெளிநாடுகளுக்குச் செய்யப்படும் முட்டை ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 1 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
10 லட்சம் முட்டைகள் மட்டுமே (அதாவது 10 சதவீதம்) ஏற்றுமதி செய்யப்படுகிறது.

சத்துணவு திட்டத்திற்கு 45 கிராமிற்கு மேல் உள்ள முட்டைகள் மட்டுமே சப்ளை: NECC தலைவர் சிங்கராஜ் தகவல்!

​கோழிப்பண்ணைகள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்
​மாநிலத்தில் உள்ள அனைத்து கோழிப்பண்ணைகளும் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். “அப்போதுதான் எவ்வளவு மூலப்பொருட்கள் தேவை, எவ்வளவு முட்டை உற்பத்தியாகிறது, எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது போன்ற முழுமையான புள்ளிவிபரங்கள் கிடைக்கும். இதன் மூலமே அடுத்தகட்ட வளர்ச்சிக்குச் செல்ல முடியும். மூலப்பொருட்களின் தேவை அதிகமாக இருக்கும் பட்சத்தில், அரசிடம் கூறி அவற்றை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். ​மேலும், மற்ற விவசாயப் பொருட்களுக்கு இல்லாத சிறப்பம்சமாக, முட்டைத் தொழிலில் மட்டும்தான் உற்பத்தியாளர்களே விலையை நிர்ணயம் செய்யும் வாய்ப்பு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

​விலை உயர்வுக்கான காரணம் என்ன?
​சத்துணவு டெண்டருக்காகவே சந்தையில் முட்டை கொள்முதல் விலை உயர்த்தப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார். முட்டை கொள்முதல் விலையைத் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவே (NECC) நிர்ணயம் செய்கிறது. ​”முட்டை விலை உயர்வை மட்டுமே பலரும் பேசுகிறார்கள். ஆனால், கோழித்தீவனம் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வால், முட்டையின் உற்பத்திச் செலவும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதையும் அனைவரும் கணக்கில் கொள்ள வேண்டும்” என்று திரு. சிங்கராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவில் கும்பாபிஷேகத் தகராறு: இளம்பெண் மீது தவெக நிர்வாகிகள் கொலைவெறித் தாக்குதல்! அரியலூர் அருகே பரபரப்பு

MUST READ