Homeசெய்திகள்சென்னைஎம்.எல்.ஏ விலைப்பேசும் புகாரில் அடுத்தடுத்து கசியும் தகவல்கள்: ஜாபர் சாதிக் பாணியில் வதந்திகளைப் பரப்புகிறதா போலீஸ்?

எம்.எல்.ஏ விலைப்பேசும் புகாரில் அடுத்தடுத்து கசியும் தகவல்கள்: ஜாபர் சாதிக் பாணியில் வதந்திகளைப் பரப்புகிறதா போலீஸ்?

-

- Advertisement -

அதிமுக எம்.எல்.ஏ இளையராஜா கொடுத்த “ஆட்சிக் கலைப்பு பணப் பேரம்” புகார் விவகாரம், தமிழக அரசியல் வட்டாரத்தில் நாளுக்கு நாள் புதிய திருப்பங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கின் பின்னணியில் காவல்துறை மற்றும் ஊடகங்கள் செயல்படும் விதம் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

எம்.எல்.ஏ.

we-r-hiring

​ஜாபர் சாதிக் வழக்கும்.. தற்போதைய முரண்பாடுகளும்:

​கடந்த திமுக ஆட்சியில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டபோது, “ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தல்” என்று ஊடகங்கள் ஆதாரமின்றி செய்தி வெளியிட்டன. ஆனால், குற்றப்பத்திரிகையில் அப்படி எந்த விபரமும் இல்லை என்பது பின்னாளில் தான் தெரியவந்தது.
​அதே பாணி தான் தற்போதும் தொடர்வதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆரம்பத்தில் ரூ.35 கோடி பணப் பேரம் என்று சொல்லப்பட்ட விவகாரம், தற்போது ரூ.180 கோடி கார்ப்பரேட் சதி என்ற லெவலுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

​சென்னை போலீசுக்கு எழும் கேள்விகள்:

​மத்திய பாஜக அரசு எதிர்க்கட்சிகள் மீது வதந்திகளைப் பரப்புவது போல, தற்போதைய தவெக அரசும் காவல்துறையை வைத்து அதே பாணியை கையில் எடுத்துள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
​கஸ்டடி எடுக்காதது ஏன்? வழக்கில் இதுவரை ஒருவரைக் கூட போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்காத சூழலில், அடுத்தடுத்த விபரங்கள் இஷ்டத்திற்கு எப்படி ஊடகங்களுக்கு கசிகின்றன?
​அதிகாரப்பூர்வ அதிகாரி யார்? இந்த வழக்கை விசாரிக்கும் புலனாய்வு அதிகாரி (I.O) யார்? விசாரணை விபரங்கள் கமிஷனருக்குப் போகிறதா அல்லது தனிநபர்களுக்கு கசிகிறதா?
​போலீஸ் நோக்கம் என்ன? சதி செய்தவர்களைக் கண்டுபிடிப்பது காவல்துறையின் நோக்கமா? அல்லது தினமும் ஒரு வதந்தியை பரப்ப வேண்டும் என அதிகாரிகளுக்கு டார்கெட் கொடுக்கப்பட்டுள்ளதா?

​ஊடகங்களின் ‘ஈயடிச்சான் காப்பி’ அரசியல்:

​ஒரு சென்சிட்டிவான வழக்கின் விபரங்களை சென்னை காவல்துறை முறைப்படி அறிக்கையாக வெளியிட வேண்டும். ஆனால், பின்னணியில் இருந்து பரப்பப்படும் தகவல்களை வாட்ஸ்அப் பார்வேர்டு மெசேஜ் போல எந்தவித குறுக்கு விசாரணையும் (No verification) செய்யாமல் ஊடகங்கள் ‘பிரேக்கிங் நியூஸ்’ ஆக நேரலையில் அடித்து விடுகின்றன.

​போலீஸ் செய்தியில் இருக்கும் குளறுபடிகள்:

​FIR-ன் படி, எம்.எல்.ஏ-விடம் முதலில் பேசியது தாம்பரத்தைத் தாண்டித் தெரியாத ‘ராஜேஷ்’ என்ற சாதாரண பத்திரிகையாளர் தான். இவரை வைத்து ஒரு கார்ப்பரேட் நிறுவனம் ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததா? அல்லது செந்தில் பாலாஜி தரப்பினர் இவர்களைப் பயன்படுத்தினரா? என்ற கேள்வி எழுகிறது.

​கடந்த 01-07-26 அன்று காவல்துறை வெளியிட்ட செய்தியில், “செந்தில் பாலாஜி, அசோக் சொல்லித்தான் பேரம் பேசப்பட்டது” என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது “கார்ப்பரேட் கம்பெனியே களமிறங்கியுள்ளது” எனத் தகவல் வெளியாவது அப்பட்டமான முரண்பாட்டை காட்டுகிறது.
​அப்போதைக்கு தோன்றுவதை வதந்தியாக பரப்பும் இந்த வழக்கின் உண்மைத்தன்மை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் குற்றப்பத்திரிகையின் போது தான் முழுமையாக வெளிச்சத்திற்கு வரும்.

MUST READ