பொதுமக்களுக்கும் தங்கம் வாங்குபவர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியளிக்கும் வகையில், தங்கம் விலை இன்று ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு ரூ.1,600 வரை குறைந்துள்ளது.
இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது, தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாலை நேர வர்த்தகத்தில் தங்கம் விலை மேலும் சரிவைச் சந்தித்து, கூடுதலாக ரூ.1,040 குறைந்தது. இதன் மூலம் ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக சவரனுக்கு ரூ.1,600 சரிந்து, சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,05,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை பெருமளவு சரிந்துள்ள இதே வேளையில், வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி எவ்வித மாற்றமுமின்றி நேற்று விற்கப்பட்ட அதே விலையான ரூ.245-க்கே இன்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அண்மைக்காலமாக ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கத்தின் விலை, ஒரே நாளில் திடீரென சவரனுக்கு ரூ.1,600 வரை குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் காரணமாக நகைக்கடைகளில் பொதுமக்களின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீதிமன்றத்தில் சரணடைந்த திமுக ‘Gen Z’ பிரிவு நிர்வாகி அன்பானந்தம் நிபந்தனை ஜாமீனில் விடுவிப்பு!

