
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியும் அருகருகே வலைப்பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதிரடி! இனி ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் உடலில் கேமரா!
நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 49 லீக் போட்டி, சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று (மே 06) பிற்பகல் 03.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொள்கிறது. இதனால் இரு அணிகளின் வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பலம் வாய்ந்த இரு அணிகளும் மோதவுள்ளதால், போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள். கடந்த முறை இந்த இரு அணிகளும் சந்தித்த போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்து சேவை தொடக்கம்!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் அணி ஆறாவது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
The biggest rivalry in history of ipl
Wohhoooo….Al-clasico match is today
I'm sure @mipaltan
Will win this match and jump upto top 4 spot🔥👀
Will rohit Sharma do something special today??#CSKvsMI pic.twitter.com/TCBm3ZUJih— प्रज्जवल😎 #SSR ❤️🇮🇳 (@MrPrajjvalViews) May 6, 2023