Homeசெய்திகள்உலகம்7 வருட கோமா - கணவரின் காலை கடித்து இயல்பு நிலைக்கு கொண்டு வந்த பாசக்கார...

7 வருட கோமா – கணவரின் காலை கடித்து இயல்பு நிலைக்கு கொண்டு வந்த பாசக்கார மனைவி!

-

- Advertisement -

“வெற்றி பெற வேண்டும் என்றால் காதல் எதையும் தாங்கிடுமே” என்ற வரிகளுக்கு உண்மையான இலக்கணமாக சீனாவில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக கோமா நிலையில் (சுயநினைவின்றி) படுக்கையில் இருந்த தனது கணவரை, அவரது மனைவி தனது விடாமுயற்சியாலும் அசாத்திய பாசத்தாலும் இயல்பு நிலைக்கு மீட்டுக்கொண்டு வந்துள்ளார்.7 வருட கோமா - கணவரின் காலை கடித்து இயல்பு நிலைக்கு கொண்டு வந்த பாசக்கார மனைவி!

விபத்தும் கோமாவும்
சீனாவைச் சேர்ந்த சாங் மெய் (45) என்பவரின் கணவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குழந்தையைக் காப்பாற்ற முயன்றபோது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்துள்ளார். இதில் அவரது தலையில் பலத்த காயம் (அடி) ஏற்பட்டு, அவர் கோமா நிலைக்குச் சென்றுள்ளார். மருத்துவர்களாலேயே கைவிடப்பட்ட நிலையில், கடந்த 7 வருடங்களாக அவர் படுத்த படுக்கையாகவே இருந்து வந்தார்.

we-r-hiring

மனைவியின் பாசப் போராட்டம்
தன் கணவரை எப்படியாவது பழைய நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்று சாங் மெய் உறுதியோடு போராடினார். கணவருக்கு மீண்டும் நினைவு திரும்ப வேண்டும் என்பதற்காக அவர் தினமும் அவரிடம் தொடர்ந்து பேசுவது, அவரது கை மற்றும் கால்களை அசைத்து விடுவது போன்ற பணிகளைச் செய்து வந்தார். இதன் ஒரு பகுதியாக, கணவரின் நரம்புகளைத் தூண்டி உணர்வை வரவழைப்பதற்காக, சாங் மெய் அவரது காலைத் தொடர்ந்து கடித்து மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.

நெகிழ்ச்சியான முடிவு
சாங் மெய்யின் இந்த 7 ஆண்டு கால தொடர் பாசப் போராட்டத்திற்கு தற்போது அசாத்திய பலன் கிடைத்துள்ளது. அவரது கணவர் மெல்ல மெல்ல சுயநினைவிற்குத் திரும்பியுள்ளார். சுயநினைவு வந்தவுடன் அவர் மெதுவாகத் தன் மனைவி சாங் மெய்யைப் பார்த்து, “I love you” என்று கூறி தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். 7 ஆண்டு காலப் போராட்டத்திற்குப் பிறகு கணவர் பேசிய இந்த வார்த்தைகள் மனைவியை மட்டுமன்றி, அங்கிருந்த அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. மனைவியின் இந்த அசாத்தியமான அன்பும் அர்ப்பணிப்பும் தற்போது சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

முறிந்தது போர் நிறுத்த ஒப்பந்தம் : மீண்டும் தீவிரமடைந்த அமெரிக்கா – ஈரான் போர்..

 

MUST READ