Homeசெய்திகள்அரசியல்"முதலமைச்சர் மேடையில் சினிமா வசனம் பேசுகிறார்!" - நெல்லையில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்...

“முதலமைச்சர் மேடையில் சினிமா வசனம் பேசுகிறார்!” – நெல்லையில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் காரசார பேட்டி!

-

- Advertisement -

“தமிழகத்தில் லஞ்சமும் ஊழலும் பெருகிவிட்டது. முதலமைச்சர் மேடையில் வெறும் சினிமா வசனம் மட்டுமே பேசுகிறார்” என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசும்போது மிகக் காரசாரமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
​நெல்லை வந்த பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கோவில் நில விவகாரம், மின்சாரத் தட்டுப்பாடு, மேகதாது அணைப் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் எழுப்பிய முக்கியக் குற்றச்சாட்டுகளின் விவரம் வருமாறு:

முதலமைச்சர்

we-r-hiring

“கோவில் நிலங்கள் திட்டமிட்டு தாரை வார்ப்பு”
​சமீபத்தில் கோவில் நிலங்கள் குறித்துப் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. கோவில் நிலங்களை யாருக்கும் விற்றுவிடவோ, தாரை வார்க்கவோ முடியாது என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி, கோவிலில் பூஜை செய்பவர்கள் பயிர் செய்து கொள்வதற்காக மட்டுமே நிலங்களை வழங்க முடியும்.

நெல்லையப்பர் கோவிலுக்குச் சொந்தமான நிலங்களில் அதிக அளவில் குடியிருப்புகள் உள்ளன. அங்குள்ள மக்களைக் காலி செய்ய வேண்டாம் என்று நாங்களும் கோரிக்கை விடுத்துள்ளோம். கோவில் நிலங்களில் நீண்ட நாட்களாகக் குடியிருப்பவர்களுக்கு, அந்த நிலத்தின் உரிமையைக் குறைந்த வாடகை அடிப்படையில் அரசு வழங்கலாம்.

“பழனி கோவில் நிலத்தைப்போலி பத்திரம் தயாரித்து ஏமாற்றியுள்ளனர். இதையெல்லாம் இந்த அரசு கண்டுகொள்ளவில்லையா? அல்லது முதலமைச்சர் கவனத்திற்கு இதெல்லாம் செல்லவில்லையா? கோவில் நிலங்கள் திட்டமிட்டுத் தனியாருக்குத் தாரை வார்க்கப்படுவது அனைத்தும் அரசுக்குத் தெரிந்துதான் நடக்கிறது.”

​”மின்சாரத் துறை மற்றும் டாஸ்மாக் வன்முறை”
​தமிழகத்தில் நிலவும் மின் தட்டுப்பாடு குறித்து மின்சாரத் துறை அமைச்சர் ஏதேனும் நடவடிக்கை எடுக்கிறாரா இல்லையா என்றே தெரியவில்லை. நான் அவர்கள் மீது உடனே குற்றம் சாட்ட விரும்பவில்லை, ஏனெனில் அவர்கள் ஆட்சிக்கு வந்து 60 நாட்கள் தான் ஆகிறது. இருப்பினும் மின்சாரத் துறையில் போதிய ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டியது அவசியமாக உள்ளது.

அதேபோல், அரியலூரில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகப் போராடிய மாணவ, மாணவிகளைக் காவல்துறையினர் மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். தன்னை ‘தாய்மாமன்’ என்று கூறிக்கொள்ளும் முதலமைச்சர், பாதிக்கப்பட்ட பிள்ளைகளைப் பற்றி ஏன் இதுவரை வாய் திறந்து கேட்கவில்லை?

முதலமைச்சருக்கு நேரடி விமர்சனம் – காரசாரக் கேள்வி!
​தமிழக அரசு அலுவலகங்களில் நேர்மை வாசம் வீசுகிறதா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “சீனி, சர்க்கரை என்று பேப்பரில் எழுதிக் கொண்டு அதை நாக்கால் நக்கினால் இனிக்காது; செயலில் இருக்க வேண்டும்” என்று பழமொழியைச் சுட்டிக்காட்டி சாடினார்.
​”முதலமைச்சர் மேடையில் வெறும் சினிமா வசனங்களை மட்டுமே பேசுகிறார். சினிமா வசனத்தை வைத்து இன்னும் எத்தனை நாட்களுக்கு ஆட்சியை ஓட்ட முடியும்? தைரியம் இருந்தால் அவர் பத்திரிகையாளர்களை நேரடியாகச் சந்தித்துப் பதில் அளிக்க வேண்டியதுதானே?” என்றும் கேள்வி எழுப்பினார்.

மேகதாது மற்றும் குதிரை பேரம் குற்றச்சாட்டு:
​”கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சியில் இருந்தவரை தமிழகத்திற்கு எந்தவிதத் தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்படாமல் நாங்கள் பார்த்துக் கொண்டோம். தற்போதைய முதலமைச்சர் நினைத்தால், ஒரு போன் காலிலேயே மேகதாது அணை கட்டுவதைக் காங்கிரஸ் கட்சியினரை நிறுத்தச் செய்ய முடியும். ஆனால், இதுவரை முதலமைச்சர் அதற்கு எந்தவொரு உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே நேரத்தில், தற்போதைய அரசியல் சூழலில் புஸ்ஸி ஆனந்த் குதிரை பேரத்தில் மிக பிஸியாக இருந்து கொண்டிருக்கிறார்” என்றும் நயினார் நாகேந்திரன் தனது பேட்டியில் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

MUST READ