Homeசெய்திகள்தமிழ்நாடுஎன்ன சார் இப்படி பேசிட்டீங்க? அரசுப் பள்ளியைக் கலாய்த்துவிட்டு.. அதே பள்ளியைக் கொண்டாடிய அமைச்சர் ஆதவ்...

என்ன சார் இப்படி பேசிட்டீங்க? அரசுப் பள்ளியைக் கலாய்த்துவிட்டு.. அதே பள்ளியைக் கொண்டாடிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!​

-

- Advertisement -

“அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்புகள் இன்னும் சீராக இல்லை; அதேநேரம் நான் இன்று இந்த உயரத்திற்கு வந்து அமைச்சராக நிற்பதற்கு அரசுப்பள்ளியே காரணம்” என்று விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மாணவர்களிடையே உரையாற்றும் போது முரண்பாடான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.என்ன சார் இப்படி பேசிட்டீங்க? அரசுப் பள்ளியைக் கலாய்த்துவிட்டு.. அதே பள்ளியைக் கொண்டாடிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!​

​சென்னை எழும்பூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு அரசியல் கலந்து பேசினார்.

we-r-hiring

​தனது கடந்தகால நினைவுகளைப் பகிர்ந்த அமைச்சர்
​மேடையில் மாணவர்களிடையே பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ​”நானும் உங்களைப் போல அரசுப்பள்ளியில் தமிழ்வழிக் கல்வியில் படித்த மாணவன் தான். நான் இன்று இந்த முக்கிய இடத்தில் நிற்பதற்கு என் ஆசிரியர்களும், இந்த அரசுமே காரணம். நான் சோகமாக இருக்கும் போதெல்லாம் என் ஆசிரியர்கள் எனக்குப் பேரறிஞர் அண்ணா, அம்பேத்கர் ஆகியோரின் புத்தகங்களைப் படிக்கக் கற்றுக்கொடுத்தார்கள். எனக்குப் பரிசாகக் கிடைத்த 3,000 புத்தகங்களை அரசுப்பள்ளி நூலகங்களுக்கு வழங்கவுள்ளேன். ​நான் ஏழ்மையில் படித்துக்கொண்டிருந்த காலத்தில், பள்ளிகளில் சரியான கழிப்பிட வசதிகள் இருக்காது. மழைக்காலங்களில் பள்ளி கட்டடம் சேதமடையும் போது மரத்தடியில் அமர்ந்து பாடம் படித்துள்ளோம். ஆனால், இன்று இந்தத் துறையின் அமைச்சராக, முதலமைச்சரின் எண்ணப்படி அரசுப்பள்ளிகளை உலகத் தரத்திற்கு உயர்த்த வேண்டும் என நினைக்கிறேன்.”

​முந்தைய ஆட்சியாளர்கள் மீது விமர்சனம் (அரசியல் பேச்சு)
​தொடர்ந்து பேசிய அமைச்சர், முந்தைய 20, 30 ஆண்டுகால ஆட்சிகளின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார், “அரசிடம் பணம் இல்லாமல் இல்லை; ஆனால், அவை முறையாகச் செலவிடப்படவில்லை. சத்துணவில் ஊழல், கட்டடம் கட்டுவதாகக் கூறி கட்டப்படாமல் போனது என அரசுப் பணம் முறையாகப் பயன்படுத்தப்படவில்லை. அரசுத் துறையை வளப்படுத்தத் தவறியதாலேயே அரசுப்பள்ளிகளின் தரம் குறையத் தொடங்கியது. இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்கிற சிந்தனை முந்தைய ஆட்சியாளர்களுக்கு வரவில்லையே என்பதுதான் எங்களின் கோபம். சாதி, மத, பாலின ஏற்றத்தாழ்வு போல இங்கும் கல்வியிலும் ஏற்றத்தாழ்வு உள்ளது. அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிபரின் மகனுக்கும், சாதாரண குடிமகனுக்கும் ஒரே மாதிரியான பாடத்திட்டமே அமைகிறது. ஆனால், இங்கு நிலைமை அப்படியில்லை. தனியார் பள்ளி கட்டணம் செலுத்த முடியாமல் 60 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகளே அரசுப்பள்ளிகளுக்கு வருகின்றனர்.”

​ஆசிரியர்களின் பங்கு குறித்து நெகிழ்ச்சி
​”அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவிலேயே சிறந்த மாடல் ஸ்கூலை உருவாக்குவோம். அரசுப்பள்ளி மாணவர்கள் அதிக அளவில் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்ட அமைச்சர், அப்துல் கலாமின் வாழ்வை உதாரணம் காட்டினார். ​”நியூஸ் பேப்பர் போட்ட பையனாக இருந்து, பின்னாளில் அதே நியூஸ் பேப்பரில் தலைப்புச் செய்தியாக அப்துல் கலாம் இடம் பிடித்தார் என்றால் அதற்கு அரசுப்பள்ளி தான் காரணம். பெற்றோர்களைக் கடந்து ஆசிரியர்களால் மட்டுமே ஒரு நல்ல சமூகத்தை உருவாக்க முடியும். வரலாற்றை மக்கள் தான் உருவாக்குவார்கள்; யாரும் கிரீடத்தை நிரந்தரமாக வைத்திருக்க முடியாது” என்றும் அவர் பேசினார்.

​பரபரப்பைக் கிளப்பிய முரண்பாடு
​ஒரே மேடையில், “அரசுப்பள்ளிகளில் இன்னும் கட்டமைப்பு வசதிகள் சிறந்ததாக இல்லை, கடந்த காலங்களில் முறையான நிதி செலவிடப்படவில்லை” என்று குற்றம் சாட்டிவிட்டு, மறுபுறம் “தான் இந்த மிகப்பெரிய உயரத்திற்கு வந்ததற்கு அரசுப்பள்ளி தான் காரணம்” என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முரண்பட்ட வகையில் பேசியது அங்கிருந்தவர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்டாவில் மீண்டும் 12 மணல் குவாரிகளைத் திறக்க அரசு முடிவு? விவசாயிகள் கடும் அதிர்ச்சி!

MUST READ