Homeசெய்திகள்தமிழ்நாடுஐடி, இசிஇ-க்கு குறையாத மவுசு.. இந்தாண்டு மட்டும் 8,500 சீட்கள் அதிகரிப்பு.. எகிறும் பொறியியல் கலந்தாய்வு...

ஐடி, இசிஇ-க்கு குறையாத மவுசு.. இந்தாண்டு மட்டும் 8,500 சீட்கள் அதிகரிப்பு.. எகிறும் பொறியியல் கலந்தாய்வு ஆர்வம்!

-

- Advertisement -

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான பொறியியல் கலந்தாய்வு விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இந்தாண்டு பொறியியல் படிப்புகளுக்கான மொத்த இடங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளின் ஆதிக்கம் குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டை விட இந்தாண்டு கூடுதலாக 20,011 பொறியியல் இடங்கள் கலந்தாய்வில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.ஐடி, இசிஇ-க்கு குறையாத மவுசு.. இந்தாண்டு மட்டும் 8,500 சீட்கள் அதிகரிப்பு.. எகிறும் பொறியியல் கலந்தாய்வு ஆர்வம்!

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பு பெற்றுள்ள 414 பொறியியல் கல்லூரிகளில் உள்ள மொத்தம் 2,67,942 இடங்களுக்கான கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் (DOTE) நடத்தி வருகிறது. இதற்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, கடந்த ஜூலை 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% சிறப்புப் பிரிவு கலந்தாய்வு நடந்து முடிந்தது. இதில் 137 மாணவர்கள் தங்களின் இடங்களைத் தேர்வு செய்துள்ளனர். இந்தாண்டு 18 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள போதிலும், புதிதாக 8 கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.

we-r-hiring

ஐடி, இ.சி.இ துறைகளில் குவிந்த 8,500 கூடுதல் இடங்கள்!
மாணவர்களின் தற்போதைய விருப்பத்திற்கு ஏற்ப, கல்லூரி நிர்வாகங்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சார்ந்த பாடப்பிரிவுகளில் இடங்களை பெருமளவில் அதிகரித்துள்ளன.

  • இ.சி.இ (ECE): கடந்த ஆண்டைப் போலவே இந்தாண்டும் இ.சி.இ பிரிவில் அதிகபட்சமாக 3,267 கூடுதல் இடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
  • கம்ப்யூட்டர் சயின்ஸ் (CSE): இப்பிரிவில் 2,754 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
  • செயற்கை நுண்ணறிவு (AI & Data Science): 2,280 கூடுதல் இடங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
  • இதர பிரிவுகள்: சிஎஸ்இ (AI & Machine Learning) பிரிவில் 1,260 இடங்களும், சைபர் செக்யூரிட்டி பிரிவில் 1,062 இடங்களும், ஐ.டி (IT) பிரிவில் 870 இடங்களும், இ.சி.இ (VLSI) பிரிவில் 840 இடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்தமாக கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சார்ந்த பிரிவுகளில் மட்டுமே இந்தாண்டு 8,500-க்கும் மேற்பட்ட கூடுதல் இடங்கள் அனுமதிக்கப்பட்டிருப்பது, இத்துறைகளுக்கான மவுசு இன்னமும் குறையவில்லை என்பதைக் காட்டுகிறது.ஐடி, இசிஇ-க்கு குறையாத மவுசு.. இந்தாண்டு மட்டும் 8,500 சீட்கள் அதிகரிப்பு.. எகிறும் பொறியியல் கலந்தாய்வு ஆர்வம்!

70% இடங்களைக் கைவசம் வைத்துள்ள தன்னாட்சி கல்லூரிகள்!
இந்தாண்டு கலந்தாய்வில் பங்கேற்கும் 414 கல்லூரிகளில், பாதிக்கு பாதி அதாவது 207 கல்லூரிகள் தன்னாட்சி (Autonomous) அந்தஸ்து பெற்றவையாக உள்ளன. கடந்த ஆண்டு 150 ஆக இருந்த தன்னாட்சி கல்லூரிகளின் எண்ணிக்கை, இந்தாண்டு புதிதாக 57 கல்லூரிகள் இணைந்து 207 ஆக உயர்ந்துள்ளது. கல்லூரிகளின் எண்ணிக்கையில் தன்னாட்சி மற்றும் தன்னாட்சி அல்லாத கல்லூரிகள் சமமாக இருந்தாலும், இடங்களின் எண்ணிக்கையில் தன்னாட்சி கல்லூரிகள் அசுர ஆதிக்கம் செலுத்துகின்றன. மொத்தமுள்ள 2,67,942 இடங்களில், 1,84,989 இடங்கள் (69.04%) தன்னாட்சி கல்லூரிகளிலேயே உள்ளன. தன்னாட்சி அல்லாத சுயநிதி கல்லூரிகளில் வெறும் 82,953 இடங்கள் (31%) மட்டுமே உள்ளன. ஐடி, இசிஇ-க்கு குறையாத மவுசு.. இந்தாண்டு மட்டும் 8,500 சீட்கள் அதிகரிப்பு.. எகிறும் பொறியியல் கலந்தாய்வு ஆர்வம்!

தன்னாட்சி கல்லூரிகளில் கல்வியின் தரம்
கண்காணிக்குமா அரசு? கல்வியாளர்கள் கவலை, தொழில் நிறுவனங்களின் தேவைக்கேற்ப பாடத்திட்டங்களை உடனுக்குடன் மாற்றிக் கொள்ளுதல், நெகிழ்வான கற்றல் முறை (Flexible Learning) போன்ற சாதகமான அம்சங்கள் தன்னாட்சி கல்லூரிகளில் இருந்தாலும், அங்கு நிலவும் சில குறைபாடுகள் குறித்து கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கல்வியாளர் அஸ்வின் கருத்து
“தன்னாட்சி கல்லூரிகளில் கேள்வித்தாள்களை அவர்களே தயாரித்து, விடைத்தாள்களைத் திருத்தி, மதிப்பெண்களையும் அவர்களே வழங்கி விடுகின்றனர். அண்ணா பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டில் இருந்தபோது 25 சதவீதத்திற்கும் குறைவாகத் தேர்ச்சி விகிதம் வைத்திருந்த சில சுமாரான கல்லூரிகள் கூட, தன்னாட்சி அந்தஸ்து பெற்ற அடுத்த ஆண்டே 85% முதல் 90% வரை தேர்ச்சி விகிதத்தைக் காட்டி விடுகின்றன. எனவே, வெறும் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்காகவே கல்லூரிகள் தன்னாட்சி அதிகாரத்தை வாங்குகின்றனவா என்ற சந்தேகம் எழுகிறது.” சில ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 10 சதவீதமாக இருந்த தன்னாட்சி கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 50 சதவீதமாக உயர்ந்துள்ளது. வரும் ஆண்டுகளில் அனைத்து கல்லூரிகளும் தன்னாட்சி அதிகாரத்தைப் பெற முயன்றால், கல்வியின் தரத்தைக் கட்டுப்படுத்துவதும் கண்காணிப்பதும் யார் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. எனவே, இந்தத் தன்னாட்சி கல்லூரிகளுக்கு முறையான வரைமுறைகளை வகுத்து, அண்ணா பல்கலைக்கழகமும் தமிழக அரசும் இணைந்து தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

MUST READ