உலக சதுரங்க தினத்தை முன்னிட்டு, சதுரங்க விளையாட்டை நேசிக்கும் வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
இளம் கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கி சாதனை
“இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான இளம் கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கி தமிழ்நாடு தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. 1988-ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்த திரு. விஸ்வநாதன் ஆனந்த் தொடங்கி, தற்கால இளம் நட்சத்திரங்களான குகேஷ், பிரக்ஞானந்தா, செல்வி வைஷாலி உள்ளிட்ட பல இளம் கிராண்ட் மாஸ்டர்கள் சர்வதேச அளவிலான சதுரங்கப் போட்டிகளில் வெற்றிபெற்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்து வருகின்றனர். சாதனை படைத்த அவர்களுக்கு இந்நாளில் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும்
உலக அரங்கில் சதுரங்கத்தின் தலைநகராக தமிழ்நாடு அதிவேகமாக முன்னேறி வருகிறது. இந்தச் சூழலில், இளைய தலைமுறையினர் சதுரங்க விளையாட்டு நுட்பங்களைக் கற்றுத்தேர்ந்து, சர்வதேச அளவிலான போட்டிகளில் மேலும் அதிக அளவில் பங்கேற்று, தமிழ்நாட்டிற்கும் இந்திய நாட்டிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும். இத்தகைய முயற்சிகளில் ஈடுபடும் அனைத்து வீரர் வீராங்கனைகளுக்கும் நமது அரசு அனைத்து வகையிலும் உறுதுணையாக நின்று தேவையான எல்லா உதவிகளையும் வழங்கும்,” என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது அறிக்கையில் உறுதியளித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை மசோதா: நாடாளுமன்றத்தில் திமுகவின் ‘செக்மேட்’ மூவ்! – ஒரு விரிவான அரசியல் கணக்கீடு
