Homeசெய்திகள்சென்னைரூ.93,000 கோடியில் பாமகவின் 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை: அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார்!

ரூ.93,000 கோடியில் பாமகவின் 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை: அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார்!

-

- Advertisement -

சென்னை தியாகராய நகரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், 2026-27ஆம் ஆண்டிற்கான 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை (Agriculture Shadow Budget) பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டார்.

அன்புமணி

we-r-hiring

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் மாநில அரசின் பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக, பா.ம.க. சார்பில் வேளாண்மைக்கென பிரத்யேக நிழல் பட்ஜெட் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

நிழல் பட்ஜெட்டை வெளியிட்டு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:

பாமகவின் பட்ஜெட் சாதனையும் மகிழ்ச்சியும்:

தமிழகத்தில் வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு பாட்டாளி மக்கள் கட்சியே முழு முதற் காரணம் ஆகும். நாங்கள் கடந்த ஆண்டுகளில் வெளியிட்ட நிழல் நிதிநிலை அறிக்கைகளில் இடம்பெற்றிருந்த பல்வேறு சிறந்த திட்டங்களை, தற்போதைய அரசு தனது பட்ஜெட்டில் அறிவித்துள்ளது எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.

ரூ.93,000 கோடி மதிப்பிலான வேளாண் பட்ஜெட்:

2026 மற்றும் 2027ஆம் ஆண்டிற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை மொத்தம் ரூ.93,000 கோடி மதிப்பு கொண்டதாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கியப் பகிர்வுகள் வருமாறு:

  • வேளாண்துறை செலவினம்: வேளாண்துறை மூலம் நேரடியாக ரூ.68,000 கோடி செலவிடப்படும்.

  • நீர்வளத்துறை (பாசனத் திட்டங்கள்): பாசனக் கட்டமைப்புகளை மேம்படுத்த நீர்வளத்துறை மூலம் ரூ.25,000 கோடி செலவிடப்படும்.

  • மாநிலத்தின் மொத்த பட்ஜெட்டில் 25% நிதி கண்டிப்பாக வேளாண் துறைக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

உழவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான முக்கிய அறிவிப்புகள்:

கூட்டுறவு வங்கிகளில் உழவர்கள் பெறக்கூடிய குறுகிய காலக் கடன்களுக்கு 10% வட்டி மானியம் வழங்கப்படும். மேலும், விவசாயப் பணிகளை நம்பியிருக்கும் வேளாண் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில், அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.24,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அன்புமணி ராமதாஸ் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

MUST READ