இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘மீசைய முறுக்கு’ திரைப்படம் திரைக்கு வந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதன் இரண்டாம் பாகமான ‘மீசைய முறுக்கு – 2’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த முக்கிய அறிவிப்பு நாளை மாலை வெளியாகிறது.
9 ஆண்டுகளைக் கடந்த ‘மீசைய முறுக்கு’ சாதனை
கடந்த 2017-ஆம் ஆண்டு ஹிப்ஹாப் ஆதி கதாநாயகனாக அறிமுகமாகி, அவரே இயக்கி, இசையமைத்து வெளியான படம் ‘மீசைய முறுக்கு’. இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களைப் பெரிதும் கவர்ந்த இத்திரைப்படம், பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. இப்படத்தின் பாடல்கள், காதல் காட்சிகள் மற்றும் நட்பை மையமாகக் கொண்ட கதைக்களம் இன்றளவும் ரசிகர்களின் ஃபேவரிட் லிஸ்ட்டில் உள்ளது. படம் வெளியாகி 9 ஆண்டுகள் நிறைவடைந்ததை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

நாளை மாலை 5 மணிக்கு மாஸ் அப்டேட்!
இப்பின்னணியில், ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை நாளை (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு வெளியிடப்போவதாக ஹிப்ஹாப் ஆதி தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். “மீசைய முறுக்கு படத்தின் 9 ஆண்டு பயணத்தை எங்களோடு கொண்டாடிய ரசிகர்களுக்கு நன்றி. ‘மீசைய முறுக்கு – 2’ படத்தின் திரையரங்க வெளியீட்டு தேதி நாளை மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும்!” என ஹிப்ஹாப் தமிழா ஆதி தெரிவித்துள்ளாா்.
எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மீண்டும் ஆதியின் துடிப்பான இசை மற்றும் இளைஞர்களைக் கவரும் வகையில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் கேட்க அவரது ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்த அறிவிப்பு வெளியானது முதல் சமூக வலைத்தளங்களில் ‘MeesayaMurukku2’ என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
“பொய்களை உருவாக்கி பரப்பக் கூடாது” – ஊடகங்களுக்கு இயக்குனர் வினோத் வேண்டுகோள்!
