Homeசெய்திகள்தமிழ்நாடுதிமுக மறுசீரமைப்பு: மாவட்டங்களை மூன்றாகப் பிரிக்கத் தலைமை முடிவு – புதிய நிர்வாகிகளுக்கு வாய்ப்பளிக்கத் திட்டம்!

திமுக மறுசீரமைப்பு: மாவட்டங்களை மூன்றாகப் பிரிக்கத் தலைமை முடிவு – புதிய நிர்வாகிகளுக்கு வாய்ப்பளிக்கத் திட்டம்!

-

- Advertisement -

​சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, திமுக கட்சியை மறுசீரமைக்கும் பணிகளில் அக்கட்சியின் தலைமை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தேர்தல் தோல்திக்கான காரணங்களை ஆராயக் கள ஆய்வு குழுக்களும், தொடர்ந்து கட்சியை வலுப்படுத்த மறுசீரமைப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மாவட்டச் செயலாளர்களை மாற்றுவதற்குப் பதிலாக நிர்வாகப் பரவலாக்கத்தைக் கொண்டுவரத் தலைமை திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.திமுக மறுசீரமைப்பு: மாவட்டங்களை மூன்றாகப் பிரிக்கத் தலைமை முடிவு – புதிய நிர்வாகிகளுக்கு வாய்ப்பளிக்கத் திட்டம்!

​மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் நிறுத்தி வைப்பு
தேர்தல் தோல்விக்குப் பிறகு பல மாவட்டச் செயலாளர்கள் மீது கட்சிக்குள் கடுமையான புகார்கள் எழுப்பப்பட்டன. சுமார் 20 முதல் 25 மாவட்டச் செயலாளர்களை அதிரடியாக மாற்ற வேண்டும் எனப் புகார்கள் அளிக்கப்பட்ட போதிலும் , தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு அந்த நடவடிக்கையைத் தலைமை தற்காலிகமாக ஓரத்தில் வைத்துள்ளதாகத் தெரிகிறது. மாறாக, பெரிய மாவட்டங்களை இரண்டாக அல்லது மூன்றாகப் பிரித்து, தற்போதுள்ள 78 மாவட்டங்களைச் சுமார் 100 மாவட்டங்களாக உயர்த்தி அதிகாரத்தைப் பரவலாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பல புதிய முகங்களுக்கும், களத்தில் தீவிரமாகச் செயல்படும் நிர்வாகிகளுக்கும் வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

we-r-hiring

​’பென்’ (Pen) டீம் மீதான தொடரும் விமர்சனங்கள்
கட்சியின் முக்கிய முடிவுகள் மற்றும் தேர்தல் வியூகங்களில் ‘பென்’ (Pen) எனும் வியூக மற்றும் தரவு சேகரிப்பு நிறுவனம் அதிக ஆதிக்கம் செலுத்துவதாகக் கட்சிக்குள் பரவலான குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன . தேர்தல் தோல்விக்கு இந்த அமைப்பின் தவறான தரவுகளும் பரிந்துரைகளுமே முக்கியக் காரணம் என ஒரு தரப்பினர் போர்க்கொடி உயர்த்தியிருந்தனர். ​தற்போது மாவட்டங்களை மறுசீரமைப்பது மற்றும் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தரவுகளைத் திரட்டும் பொறுப்பும் மீண்டும் அதே நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவது உடன்பிறப்புகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

​ஆகஸ்ட் 5-ல் திருப்புமுனை அறிக்கை
வருகிற ஆகஸ்ட் 5 ஆம் தேதியன்று மறுசீரமைப்பு குழு தங்களது இறுதி அறிக்கையைத் தலைமைக்குச் சமர்ப்பிக்க உள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையிலும், கட்சித் தலைமையின் அடுத்தடுத்த நடவடிக்கைகளின் மூலமுமே திமுகவின் எதிர்கால அமைப்பு மாற்றங்கள் எத்தகைய திசையை நோக்கிச் செல்லும் என்பது முழுமையாகத் தெரியவரும்.

ஒவ்வொன்றாய் மாறிப்போகும் மாநில உரிமைகள் – மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வேதனை!

MUST READ