Homeசெய்திகள்சினிமாஇன்சூரன்ஸ் காலாவதியான காரில் பயணித்த ரஜினி

இன்சூரன்ஸ் காலாவதியான காரில் பயணித்த ரஜினி

-

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த இன்று திருப்பதி மலையில் ஏழுமலையானை வழிபட்ட பின் தன்னுடைய காரில் கடப்பா தர்காவுக்கு சென்றார். அவருடன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் கடப்பா தர்காவுக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் அவருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கும் TN 06 R 9297 பதிவு எண் கொண்ட கார் இன்சூரன்ஸ் 2021 ம் ஆண்டு 8-ம் மாதம் காலாவதியாகிவிட்டதாக vahaninfos.com வெப்சைட் தெரிவிக்கிறது. சாதாரண பொதுமக்கள் வாகனங்களில் செல்லும்போது மடக்கி பிடித்து சோதனை செய்து இன்சூரன்ஸ் இல்லை என்று கூறி அபராதம் விதிக்கும் போலீசார், இவரை போன்ற பிரமுகர்களை கண்டு கொள்வது கிடையாது என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் ரஜினிகாந்த் தன்னுடைய கார் இன்சூரன்ஸ் கூட புதுப்பிக்காமல் இருப்பது பற்றி தகவல் அறிந்த அவருடைய ரசிகர்கள், பொதுமக்கள் ஆகியோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

MUST READ