spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா“ஈரமான ரோஜாவே” நாடக இயக்குநர் திடீர் உயிரிழப்பு

“ஈரமான ரோஜாவே” நாடக இயக்குநர் திடீர் உயிரிழப்பு

-

- Advertisement -

தனியார் தொலைக்காட்சியின் நெடுந்தொடர் இயக்குனர் தாய் முத்து செல்வன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார், தாய் முத்து செல்வன் (50). இவருக்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செயப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, கடந்த சில நாட்களாக நுரையீரல் பாதிப்பு காரணமாக சென்னை கீர்ம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

we-r-hiring

இந்நிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காத்து கருப்பு, தாயுமானவன், கல்யாண முதல் காதல் வரை, மௌன ராகம் பாகம் 1, நாம் இருவர் நமக்கு இருவர், பாவம் கணேசன், ஈரமான ரோஜாவே பாகம் 2 உள்ளிட்ட நாடகங்களை இயக்கியுள்ளார். இவர் 2009 ஆம் ஆண்டு வெளியான நடிகர் எஸ்.ஜே சூர்யாவை வைத்து இயக்கிய நியூட்டனின் மூன்றாம் விதி என்ற படத்தையும் இயற்றியுள்ளார். இன்று மாலை 3 மணி அளவில் சென்னை அசோக் நகரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது.

MUST READ