spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்குட்கா முறைகேடு வழக்கு - சிபிஐக்கு கால அவகாசம்

குட்கா முறைகேடு வழக்கு – சிபிஐக்கு கால அவகாசம்

-

- Advertisement -

குட்கா முறைகேடு வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு சென்னை சிபிஐ நீதிமன்றம் மேலும் கால அவகாசம் தந்து விசாரணையை ஜனவரி 10 ஆம் தேதிக்கு நிதிபதி மலர் வாலன்டினா ஒத்திவைத்தார்.

தமிழகத்தில் புகை புகையிலைப் பொருட்களுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. கடந்த 2016 ஆம் ஆண்டு செங்குன்றம் பகுதியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார். அதில் லஞ்சம் கொடுக்கப்பட்ட ஒரு டைரியை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள். இந்த சர்ச்சையில் அப்போது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் போலீஸ் டிஜிபி ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய மாநில அரசு உயர் அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகள் பெயர்களும் வெளிவந்தது.

we-r-hiring

இந்நிலையில் தான் குட்கா ஊழல் தொடர்பாக திமுக தரப்பில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்திரவிட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே கிடங்கு உரிமையாளர்கள் மாதவராவ், பங்குதாரர்கள் குமார் சங்கர் குப்தா, சீனிவாசராவ், மத்திய கலால்துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலாய்த்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகியோர் ஏழு பேர் கடந்த 2017 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்கள்.

இந்நிலையில் இந்த வழக்கில் சிபிஐ போலீசார் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு இவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் கைது செய்யப்பட்ட ஏழு பேர் மீது மட்டும்தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மத்திய மாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு கடந்த ஜூலை 19ஆம் தேதி அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த முறை சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன்பு விசாரணைக்கு வந்தபோது சிபிஐ தரப்பில் 11 பேருக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்த கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகளும் பிழைகளும் இருந்ததால் திருத்தம் செய்து சாட்சிகள் குறித்து விவரங்கள் மற்றும் அவர்களின் வாக்குமூலம் குறித்தும் விவரமாக இணைத்து தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதுவரை ஏழு பேருக்கு மட்டுமே எதிராக வழக்கு நடத்த உன் மத்திய மாநில அரசிடம் இருந்து அனுமதி பெற்றதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதை அடுத்து தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பிழைகளை முழுவதும் திருத்தம் செய்து தாக்கல் செய்ய வேண்டும் எனவும் மேலும் யார் யாருக்கு எதிராக வழக்கு தொடர ஒப்புதல் கிடைத்துள்ளது என்ற விவரத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்
வழக்கில் தொடர்பில்லாமல் முடக்கப்பட்ட அசையா சொத்துக்களை விடுவிக்க மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் உள்ள பிழைகளை திருத்தி புதிதாக தாக்கல் செய்ய நிதிபதி ஆணையிட்டார். இதுவரை ஏழு பேருக்கு எதிராக மட்டுமே வழக்கை நடத்த ஒன்றிய அரசிடமிருந்தும் மாநில அரசிடம் இருந்தும் அனுமதி பெற்றதாக சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது. மேலும் யார் யார் மீது வழக்கு தொடர ஒப்புதல் கிடைத்துள்ளது என்ற விவரத்தையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

மேலும் வழக்கில் தொடர்பில்லாமல் முடக்கப்பட்ட அசையா சொத்துக்களை விடுவிக்க மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதி முடக்கப்பட்ட அசையா சொத்துக்களை விடிவிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 10 ஆம் தேதிக்கு நிதிபதி மலர் வாலன்டினா ஒத்திவைத்தார்.

MUST READ