Homeசெய்திகள்க்ரைம்கடலூரில் தம்பதி மீது மாற்றுத்திறனாளி உட்பட இருவர் எஸ்பியிடம் பரபரப்பு புகார்! வேலை வாங்கித் தருவதாகக்...

கடலூரில் தம்பதி மீது மாற்றுத்திறனாளி உட்பட இருவர் எஸ்பியிடம் பரபரப்பு புகார்! வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1 கோடி மோசடி

-

- Advertisement -

மத்திய அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, மாற்றுத்திறனாளி உட்பட இருவரிடம் ரூ.1 கோடிக்கும் அதிகமாகப் பணம் பெற்றுக்கொண்டு போலி பணி நியமன ஆணை வழங்கிய தம்பதியினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்ளிக்கப்பட்டுள்ளது.கடலூரில் தம்பதி மீது மாற்றுத்திறனாளி உட்பட இருவர் எஸ்பியிடம் பரபரப்பு புகார்! வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1 கோடி மோசடி

கடலூர் சாவடி குறிஞ்சிநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பரத் குமார் மற்றும் சுருதி தம்பதியினர். இவர்கள் மத்திய அரசின் வங்கி, ரயில்வே மற்றும் வருமான வரித்துறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் தங்களுக்கு உயர் அதிகாரிகளுடன் தொடர்பு உள்ளதாகவும், எளிதில் வேலை வாங்கித் தருவதாகவும் பலரிடம் கூறி வந்துள்ளனர். இதை நம்பி, ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியைச் சேர்ந்த கட்டாரி அபினேஷ் (மாற்றுத்திறனாளி) மற்றும் தசாரி ஜானகிராமன் ஆகிய இருவரும் இவர்களைத் தொடர்பு கொண்டு வேலை கேட்டுள்ளனர்.கடலூரில் தம்பதி மீது மாற்றுத்திறனாளி உட்பட இருவர் எஸ்பியிடம் பரபரப்பு புகார்! வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1 கோடி மோசடி

we-r-hiring

போலி ஆவணங்கள் மற்றும் பயிற்சி நாடகம்:
வருமான வரித்துறை வேலை: மாற்றுத்திறனாளி வாலிபரான கட்டாரி அபினேஷுக்கு வருமான வரித்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, தம்பதியினர் தவணை முறையில் அவரிடமிருந்து 75 லட்ச ரூபாயைப் பெற்றுள்ளனர். பின்னர் அவருக்கு போலி பணி நியமன ஆணையையும் வழங்கியுள்ளனர். மேலும், டெல்லியில் சென்று மூன்று மாத காலம் பயிற்சியில் ஈடுபட வேண்டும் எனக்கூறி, அவரை ஒரு தனியார் பயிற்சி நிறுவனத்திலும் சேர்த்துள்ளனர். அதன்படி அவரும் 3 மாதங்கள் பயிற்சியை முடித்துள்ளார்.

ரயில்வே துறை வேலை: தசாரி ஜானகிராமனுக்கு ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 40 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுக்கொண்டு போலி பணி நியமன ஆணை மற்றும் அரசு அடையாள அட்டைகளையும் வழங்கியுள்ளனர்.

வெளிச்சத்திற்கு வந்த தில்லுமுல்லு:
இதனைத் தொடர்ந்து, ஜானகிராமன் தங்களுக்கு வழங்கப்பட்ட பணி நியமன ஆணையை எடுத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு வேலைக்குச் செல்ல முயன்றபோதுதான், அது போலி ஆணை என்பது தெரியவந்துள்ளது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இரு வாலிபர்களும் உடனடியாக பரத் குமார் மற்றும் சுருதி தம்பதியினரைத் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், அவர்களின் செல்போன் எண்கள் அணைத்து வைக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்கள் அவர்களை நேரில் சென்று கேட்டபோது, “இனிமேல் வீட்டுப் பக்கம் வந்தால் கொன்றுவிடுவோம்” என்று தம்பதியினர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

எஸ்பி அதிரடி உத்தரவு:
பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி கட்டாரி அபினேஷ் மற்றும் தசாரி ஜானகிராமன் ஆகியோர் தங்களை ஏமாற்றிய தம்பதியினர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரில் புகார் மனு அளித்தனர்.

மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர், இச்சம்பவம் குறித்து உடனடியாக வழக்குப்பதிவு செய்து தம்பதியினரைத் தீவிரமாகத் தேடி, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1 கோடிக்கும் அதிகமாக மோசடி செய்துள்ள இத்தம்பதியினர், இவர்களைத் தவிர வேறு யாரிடமாவது இதுபோன்று பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இப்பகுதியில் போலி வேலை வாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட தம்பதியினர் தலைமறைவாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லையில் பரபரப்பு: ரூ.5 லட்சம் கொடுத்தால் ரூ.10 லட்சம் தருவதாக மோசடி – கமிஷனுக்கு ஆசைப்பட்டு ஏஜெண்டுகளாக செயல்பட்ட 2 இளம் பெண்கள் கைது!

MUST READ