Homeசெய்திகள்தமிழ்நாடுஆன்லைன் வர்த்தக மோசடி- கல்லூரி மாணவி தற்கொலையில் 3 பேர் சிக்கினர்

ஆன்லைன் வர்த்தக மோசடி- கல்லூரி மாணவி தற்கொலையில் 3 பேர் சிக்கினர்

-

- Advertisement -

ஆன்லைன் வர்த்தக மோசடி- கல்லூரி மாணவி தற்கொலையில் 3 பேர் சிக்கினர்

ஆன்லைன் வர்த்தகத்தில் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்த கல்லூரி மாணவி மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மூன்று பேரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் ஏழுகிணறு போர்த்துகீசியர் தெருவை சேர்ந்தவர் அருண்குமார். இவரின் மனைவி சாந்தி. தம்பதி கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள். இவர்கள் தாயுடன் வசித்து வருகிறார்கள். இதில் மூத்த மகள் மகாலட்சுமி சென்னை தனியார் கல்லூரியில் பி. காம் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

ஆன்லைன் வர்த்தக மோசடி- கல்லூரி மாணவி தற்கொலையில் 3 பேர் சிக்கினர்

கல்லூரியில் படித்து வந்த மகாலட்சுமி இன்ஸ்டாகிராமில் வந்த ஒரு ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து, ஆன்லைன் மூலம் பங்கு பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறார். 30 ஆயிரம் ரூபாய் பணத்தை கட்டி இருக்கிறார். அதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று தெரிய வந்திருக்கிறது. 30 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்துவிட்ட செய்தி குடும்பத்திற்கு தெரிய வந்ததும் மகாலட்சுமியின் தாய் சாந்தி, கடுமையாக திட்டி இருக்கிறார்.

குடும்பம் இத்தனை கஷ்டத்தில் இருக்கும்போது இப்படி முட்டாள்தனமாக பணத்தைக் கட்டி இழந்து விட்டாயே என்று திட்டி இருக்கிறார். இதில் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார் மகாலட்சுமி. கடந்த மாதம் இரண்டாம் தேதி வீட்டில் உள்ள அறையில் மின்விசையில் தூக்கி போட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

தகவல் அறிந்த முத்தியால்பேட்டை போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டது மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அமானுல்லா கான், முகமது ஆசிப் இக்பால், முகமது பைசல் என்பது தெரிய வந்திருக்கிறது. மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில், மூன்று பேரையும் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

MUST READ