Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்PNR ஸ்டேட்டஸ் முதல் கார் புக்கிங் வரை! யூபர் கொண்டுவந்த செம்ம ஃபீச்சர்... பயணிகள் ஹேப்பி!

PNR ஸ்டேட்டஸ் முதல் கார் புக்கிங் வரை! யூபர் கொண்டுவந்த செம்ம ஃபீச்சர்… பயணிகள் ஹேப்பி!

-

- Advertisement -

வாடிக்கையாளர்களின் பயணங்களை மேலும் எளிதாக்கும் நோக்கில், பிரபலப் பயணச் சேவை நிறுவனமான யூபர் (Uber), தனது செயலியில் நேரடியாகவே ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் புதிய வசதியை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.PNR ஸ்டேட்டஸ் முதல் கார் புக்கிங் வரை! யூபர் கொண்டுவந்த செம்ம ஃபீச்சர்... பயணிகள் ஹேப்பி!

‘ஆல் இன் ஒன்’ பயணச் செயலி
இதுவரை கார், ஆட்டோ மற்றும் பைக் முன்பதிவு சேவைகளை வழங்கி வந்த யூபர், சமீபத்தில் மெட்ரோ மற்றும் பேருந்து பயணப் சீட்டுகளை முன்பதிவு செய்யும் வசதிகளையும் தனது செயலியில் இணைத்தது. அந்த வரிசையில், தற்போது பயன்பாட்டாளர்களின் வசதிக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு சேவையையும் தனது தளத்தில் ஒருங்கிணைத்துள்ளது.

we-r-hiring

PNR ஸ்டேட்டஸ் பார்க்கும் வசதி
இந்த புதிய வசதியின் மூலம் பயணிகள் தங்களது ரயில் பயணத்திற்கான டிக்கெட்டுகளை எளிதாக முன்பதிவு செய்ய முடியும். அதுமட்டுமின்றி, ரயில்களின் PNR நிலையைத் (PNR Status) தெரிந்துகொள்ளவும், ரயில் எப்போது வரும் என்ற நேரலையைக் (Live Tracking) கண்காணிக்கும் அம்சங்களும் இச்செயலியில் வழங்கப்பட்டுள்ளன.

பயணிகளுக்குப் பெரும் நிம்மதி
ஒரே செயலியின் மூலமாக ஆட்டோ, கார், பைக், மெட்ரோ, பேருந்து மற்றும் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடிவது, பயண திட்டமிடலை மிகவும் எளிதாக்கியுள்ளது. இனி வெவ்வேறு பயணங்களுக்குப் பல்வேறு செயலிகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை என்பதால், இந்த ‘ஆல் இன் ஒன்’ (All-in-One) முயற்சி பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஜியோவின் 10-ஆம் ஆண்டு கொண்டாட்டம்: மீண்டும் களமிறங்கும் ‘ஜியோ பிரைம்’ — ரூ.300-ல் அதிரடி சலுகைகள் அறிவிப்பு!

MUST READ