spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா'தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் குமாரசாமி சிங்கப்பூருக்கு பயணம்'- காரணம் என்ன தெரியுமா?

‘தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் குமாரசாமி சிங்கப்பூருக்கு பயணம்’- காரணம் என்ன தெரியுமா?

-

- Advertisement -

 

'தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் குமாரசாமி சிங்கப்பூருக்கு பயணம்'- காரணம் என்ன தெரியுமா?
File Photo

கர்நாடகா மாநில முன்னாள் முதலமைச்சரும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஹெச்.டி.குமாரசாமி, மருத்துவ பரிசோதனைகளுக்காக சிங்கப்பூர் சென்றுள்ளார்.

we-r-hiring

என்னைய கெட்ட வார்த்தை பேச வைக்காதீங்க… ஆத்திரமடைந்த நட்டி நடராஜ்!

மொத்தம் 224 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு மே 10- ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, பதிவான வாக்குகளை எண்ணும் பணி மே 13- ஆம் தேதி அன்று காலை 08.00 மணிக்கு தொடங்கவுள்ளது. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், புதிய அரசு அமைப்பதில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரபரப்பான இந்த சூழ்நிலையில், ஹெச்.டி.குமாரசாமி மருத்துவ பரிசோதனைகளுக்காக சிங்கப்பூர் சென்றுள்ளார். தேர்தல் பரப்புரையின் போது, உடல்நலம் பாதிக்கப்பட்டதால், ஹெச்.டி.குமாரசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவர் சிங்கப்பூருக்கு சென்றுள்ளார்.

அனுஷ்கா படத்திற்காக பாடகர் ஆகும் தனுஷ்!

அவரது நேர்முக உதவியாளரும், மேலும் சிலரும் சிங்கப்பூர் சென்றுள்ளனர். தேர்தல் முடிவுகள் வெளியாகும் சனிக்கிழமை அன்று ஹெச்.டி.குமாரசாமி பெங்களூருவுக்கு திரும்பி விடுவார் என்றும் கூறப்படுகிறது.

MUST READ