திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும் வரை அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று தேர்தல் ஆணையம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தலுக்கான தடை நீட்டிப்புமேற்கண்ட 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கக் கூடாது எனக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டித்து உத்தரவிட்டது.

விரைந்து விசாரிக்க அரசு கோரிக்கை
இடைத்தேர்தலுக்குத் தடை கோரிய வழக்கு தொடர்பாகத் தமிழ்நாடு அரசு சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையில், வழக்கு விசாரணை தாமதமாவதைத் தவிர்க்கவும், தொகுதிகளின் நிலவரத்தைக் கருத்தில் கொண்டு வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் தங்கள் பதில்களை மனுவாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஒத்திவைத்தது.
