Homeசெய்திகள்சென்னைசென்னை ராஜ்பவன் - மத்திய கைலாஷ் சாலை விரிவாக்கப் பணிகள் மந்தம்! வாகன ஓட்டுநர்கள் அவுதி

சென்னை ராஜ்பவன் – மத்திய கைலாஷ் சாலை விரிவாக்கப் பணிகள் மந்தம்! வாகன ஓட்டுநர்கள் அவுதி

-

- Advertisement -

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முக்கிய நோக்கத்துடன் தொடங்கப்பட்ட ராஜ்பவன் சாலை முதல் மத்திய கைலாஷ் வரையிலான சாலை விரிவாக்கப் பணிகள் தற்போது மந்தநிலையில் நடைபெற்று வருவதால், அப்பகுதியில் நாள்தோறும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.சென்னை ராஜ்பவன் - மத்திய கைலாஷ் சாலை விரிவாக்கப் பணிகள் மந்தம்! வாகன ஓட்டுநர்கள் அவுதி

கடந்த முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் முன்மொழியப்பட்டு கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், தற்போது சாலை விரிவாக்கம் மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இருப்பினும், இப்பணிகள் மிகவும் மெதுவான வேகத்தில் நடந்து வருவதாகப் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.சென்னை ராஜ்பவன் - மத்திய கைலாஷ் சாலை விரிவாக்கப் பணிகள் மந்தம்! வாகன ஓட்டுநர்கள் அவுதி

we-r-hiring

குறிப்பாக, அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கி ஆளுநர் மாளிகை வரையிலான வழித்தடத்தில் விரிவாக்கப் பணிகள் ஆமை வேகத்தில் நீடிப்பதால், காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அலுவலகம் செல்வோரும், மாணவர்களும் உரிய நேரத்தில் போக முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

வாகன ஓட்டிகளின் துயரத்தைத் தவிர்க்கும் வகையில், நிலுவையில் உள்ள சாலை விரிவாக்கம் மற்றும் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் தற்போதைய முக்கிய கோரிக்கையாக உள்ளது.

கொளத்தூர் வாக்குப்பதிவு இயந்திர முறைக்கேடு: சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்குத் தொடர முடிவு

MUST READ