தமிழ் வழியில் கல்வி கற்றவர்களுக்கு மாநில அரசுப் பணிகளில் முன்னுரிமை (PSTM – Persons Studied in Tamil Medium) வழங்குவது தொடர்பான சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். ![]()
இதன்படி, நேரடி நியமனம் மூலம் அரசுப் பணியில் முதன்முறையாகச் சேரும்போது மட்டுமே தமிழ் வழிக் கல்விக்கான முன்னுரிமையை (20% இடஒதுக்கீடு) பயன்படுத்த முடியும் என்ற முக்கியக் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.

சட்டத்திருத்தத்தின் முக்கிய அம்சங்கள் & விதிமுறைகள்முதல் முறை நியமனத்திற்கு மட்டுமே: நேரடி ஆட்சேர்ப்பு மூலமாக அரசுப் பணியில் முதல்முறையாக நுழையும் போது மட்டுமே தமிழ் வழியில் படித்ததற்கான முன்னுரிமைச் சலுகையைப் பயன்படுத்த முடியும்.
பதவி உயர்வுக்குப் பயன்படுத்த முடியாது: ஒருமுறை அரசுப் பணியில் சேர்ந்த பிறகு, அடுத்தடுத்த பதவி உயர்வுகளைப் பெறுவதற்குத் தமிழ் வழி கல்வி சான்றிதழைப் (PSTM) பயன்படுத்த முடியாது.
அடிப்படை தகுதி: விண்ணப்பிக்கும் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட அனைத்து நிலைக் கல்வியையும் (பள்ளிப் படிப்பு முதல் பட்டம்/பட்டயப்படிப்பு வரை) முழுமையாகத் தமிழ் வழியிலேயே படித்திருக்க வேண்டும். அரசுப் பணி நியமனங்களில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரவும், தகுதியான தமிழ் வழி மாணவர்களுக்கு உரிய வாய்ப்பை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து: அவசரமாக எடுக்கப்பட்ட முடிவல்ல – அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
