Homeசெய்திகள்தமிழ்நாடு“தேர்தல் வழக்குகளால் பலனில்லை; மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு திமுக அரசியலை முன்னெடுக்க வேண்டும்” – பத்திரிகையாளர்...

“தேர்தல் வழக்குகளால் பலனில்லை; மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு திமுக அரசியலை முன்னெடுக்க வேண்டும்” – பத்திரிகையாளர் மணி கருத்து!

-

- Advertisement -

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுமார் 8,300 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இத்தோல்வியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு (Election Petition) தாக்கல் செய்துள்ளார்.“தேர்தல் வழக்குகளால் பலனில்லை; மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு திமுக அரசியலை முன்னெடுக்க வேண்டும்” – பத்திரிகையாளர் மணி கருத்து!

தேர்தல் வழக்கின் சட்ட ரீதியான சாத்தியக்கூறுகள்
தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளரோ அல்லது அத்தொகுதியின் வாக்காளரோ முடிவுகள் அறிவிக்கப்பட்ட 6 மாத காலத்திற்குள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர சட்டத்தில் இடமுண்டு. இருப்பினும், இதுபோன்ற தேர்தல் வழக்குகள் இறுதி முடிவுக்கு வர 6 முதல் 10 ஆண்டுகள் வரை தாமதமாக வாய்ப்புள்ளது. உதாரணமாக, 2009-ல் ப.சிதம்பரம் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கும், 2011-ல் ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து சைதை துரைசாமி தொடர்ந்த வழக்கும் பல ஆண்டுகள் நீடித்தன. எனவே, சட்டமன்ற பதவிக்காலம் முடிந்த பிறகு வரும் நீதிமன்றத் தீர்ப்புகளால் பெரிய அளவில் எந்த பயனும் விளைவதில்லை.

we-r-hiring

“தேர்தல் வழக்குகளால் பலனில்லை; மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு திமுக அரசியலை முன்னெடுக்க வேண்டும்” – பத்திரிகையாளர் மணி கருத்து!

முன்னாள் முதல்வரின் வழக்கிற்கு பத்திரிகையாளர் மணி ஆச்சரியம்
ஒரு கட்சியின் தலைவராகவும், முதலமைச்சராகவும் இருந்த ஒரு மூத்த அரசியல் தலைவர், சுமார் 8,200 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பிறகு நீதிமன்றத்தை நாடுவது ஆச்சரியமளிப்பதாக பத்திரிகையாளர் மணி குறிப்பிட்டுள்ளார். இந்திரா காந்தி, காமராஜர், ஜெயலலிதா போன்ற மக்கள் செல்வாக்குமிக்க தலைவர்கள் தேர்தலில் தோல்வியடைந்தபோது, அதை மக்கள் தீர்ப்பாகக் கருதி கண்ணியத்துடன் ஏற்றுக்கொண்டார்களே தவிர நீதிமன்றத்திற்குச் செல்லவில்லை.

திமுகவின் அணுகுமுறை மற்றும் தோல்விக்கான பின்னணி
2026 தேர்தலில் திமுக பின்னடைவைச் சந்தித்தற்கும் கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றதற்கும் கட்சிக்கு வெளியில் உள்ள “வாடகை வாய்கள்” (சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் முட்டாள்தனமான கருத்துக்களைப் பரப்பும் நபர்கள்) தவறான பிம்பங்களை உருவாக்கியதே முக்கியக் காரணம் என்று விமர்சித்தார். அவர்கள் ஈவிஎம் (EVM) இயந்திரங்களில் சதி நடந்துள்ளது எனப் பரப்பும் கருத்துக்களை நம்பி ஸ்டாலின் நீதிமன்றத்திற்குச் சென்றிருப்பது துரதிர்ஷ்டவசமானது. அதே தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் 59 திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில், கொளத்தூரில் மட்டும் சதி நடந்தது என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

தொகுதி நிலவரம் சரியாக இல்லை என்று உளவுத்துறையும் ஆலோசகர்களும் முன்கூட்டியே எச்சரித்தும், ஸ்டாலின் பிடிவாதமாக கொளத்தூரிலேயே போட்டியிட்டது அவருடைய சொந்த அரசியல் முடிவு (Judgemental Error) தான்.“தேர்தல் வழக்குகளால் பலனில்லை; மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு திமுக அரசியலை முன்னெடுக்க வேண்டும்” – பத்திரிகையாளர் மணி கருத்து!

மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட ஆலோசனைகள்
மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி எத்தகைய தோல்விகள் வந்தாலும் அதைத் தாண்டி கலை, இலக்கியம், மக்கள் போராட்டங்கள் மூலம் ஊடக வெளிச்சத்தையும் அரசியல் நகர்வுகளையும் தன் வசமே வைத்திருப்பார். ஆனால், 24 மணி நேரமும் அரசியல் மட்டுமே தெரிந்த ஸ்டாலின், இத்தகைய தோல்விகளை எதிர்கொள்ளும் போது தத்தளிக்கிறார்.

ஆளும் கட்சியாக 59 தொகுதிகளைக் கைப்பற்றி வலுவான எதிர்க்கட்சியாக அமர்வது என்பது மோசமான செயல்பாடு அல்ல. எனவே, தேர்தல் வழக்குகளில் நேரத்தைச் செலவிடாமல், மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு, மக்கள் பிரச்சினைகளுக்காக வீதியில் இறங்கிப் போராடும் வலுவான எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் மீண்டும் செயல்படத் தொடங்க வேண்டும் என்பதே பத்திரிகையாளர் மணியின் கருத்தாக அமைந்துள்ளது.

3-வது அணி உருவானால் பாஜகவுக்குத் தான் லாபமா? அரசியல் விமர்சகர் வில்லவன் ராமதாஸ் ஓபன் டாக்!

MUST READ