spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாகண்ணீருடன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த டி.கே.சிவக்குமார்

கண்ணீருடன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த டி.கே.சிவக்குமார்

-

- Advertisement -

கண்ணீருடன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த டி.கே.சிவக்குமார்

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் நிலையில், டி.கே.சிவக்குமார் ஆனந்த கண்ணீர் வடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Image

கனகாபுரா தொகுதியில் போட்டியிட்ட கர்நாடக காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் 72% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதே தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் அசோக் 11.15 சதவீதம் வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார். பாஜக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் அசோக் 8 ஆயிரத்து 3- வாக்குகளுடன் மூன்றாவது தள்ளப்பட்டார்.

we-r-hiring

செய்தியாளர்கள் சந்திப்பில் கண்ணீர் மல்க தொண்டர்களுக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்தார் டி.கே.சிவக்குமார். மேலும் முதல்வர் தேர்வு குறித்து எந்த கருத்தும் இல்லை, எனக்கு முதலில் காங்கிரஸ் தான் எனக் கூறிய அவர், வெற்றிக்கு, காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் மக்கள் தான் காரணம் என்றார்.

முதல்வர் போட்டியில் உள்ள சித்தராமையா உள்ளிட்டோருக்கு நன்றி எனக் கூறி டி.கே.சிவக்குமார் கண்ணீர் வடித்தார். வெற்றியைக் கொடுத்த மக்களின் காலை தொட்டு வணங்குகிறேன் என்றும் அவர் கூறினார்.

MUST READ