நடிகர் தனுஷ் கட்டாகுஸ்தி இயக்குனருடன் கூட்டணி அமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தென்காசி குற்றாலம் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகை ப்ரியா அருள் மோகன் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.


இந்தப் படத்தை அடுத்து தனுஷ் தனது 50-வது படத்தை சொந்தமாக இயக்கி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தனுஷ் அடுத்ததாக கட்டாகுஸ்தி இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இயக்குனர் செல்லா அய்யாவு ஆழ்வார், சிலுக்குவார் பட்டி சிங்கம், கட்டா குஸ்தி உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். இவர் இவர் 2016 இல் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் எனும் திரைப்படத்தில் கதை ஆசிரியர் மற்றும் துணை இயக்குனராக பணியாற்றி உள்ளது குறிப்பிடத்தது.
கட்டா குஸ்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது தனுஷ் இந்த இயக்குனருடன் கூட்டணி அமைக்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.


