Homeசெய்திகள்உலகம்நேபாள வெள்ளப் பேரழிவு: பலி எண்ணிக்கை 1,000-ஐ நெருங்குகிறது... திணறும் மீட்புக் குழுக்கள்!

நேபாள வெள்ளப் பேரழிவு: பலி எண்ணிக்கை 1,000-ஐ நெருங்குகிறது… திணறும் மீட்புக் குழுக்கள்!

-

- Advertisement -

நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கில் சிக்கி நேபாள நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகள் கடுமையாக உருக்குலைந்துள்ளன. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

we-r-hiring

6-வது நாளாக தொடரும் மீட்புப் பணி: பலி 939 ஆக அதிகரிப்பு நேபாளத்தின் தேசிய பேரிடர் இடர் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, வெள்ளத்திற்குப் பலியானோர் எண்ணிக்கை 939 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மீட்கப்பட்ட சடலங்களின் விவரம்:

  • சித்வான்: 272

  • நவல்ப்பராசி (கிழக்கு): 207

  • நவல்ப்பராசி (மேற்கு): 151

  • நுவாகோட்: 95

  • கோர்கா: 62

  • தடிங்: 55

  • தனஹு: 37

  • ரசுவா: 24

4,000க்கும் மேற்பட்டோர் மாயம் 99 பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் 591 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட மொத்தம் 4,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகப் பேரிடர் மேலாண்மை ஆணையம் கவலை தெரிவித்துள்ளது. மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு நீர்மின் நிலையங்களில் பணியாற்றிய 933 தொழிலாளர்களை தொடர்பு கொள்ள முடியாமல் மீட்புக்குழுவினர் திணறி வருகின்றனர்.

10,500 பேர் மீட்பு வெள்ளப் பெருக்கில் சிக்கிய பகுதிகளில் இருந்து இதுவரை 10,500 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர்.

நேபாள வெள்ளப்பெருக்கு: பனிப்பாறை உடைப்பு காரணம் அல்ல… 5,200 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்த பனிப்பாறை! – விஞ்ஞானிகள் அதிர்ச்சி அறிக்கை

MUST READ