தமிழக சட்டப்பேரவையில் சட்டம் – ஒழுங்கு குறித்த விவாதத்தின் போது, முதல்வர் விஜய்யின் பதிலுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், செய்தியாளர்களைச் சந்தித்துக் காரசாரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.


செய்தியாளர் சந்திப்பின் முக்கிய அம்சங்கள்
சட்டம் – ஒழுங்கு கேள்விகளுக்குப் பதிலில்லை: “சட்டம் – ஒழுங்கு சீர்கேடு தொடர்பாக நாங்கள் எழுப்பிய எந்தவொரு கேள்விக்கம் முதல்வர் விஜய் முறையான பதில் அளிக்கவில்லை. வெறும் பஞ்ச் டயலாக்குகளைப் பேசி, கவனத்தைத் திருப்பி (Diversion) ரீல்ஸ்களுக்காக மட்டுமே பேசிவிட்டுச் சென்றுள்ளார்.”
அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகள்: “எங்கள் மீதான அமலாக்கத்துறை வழக்குகள் உட்பட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் நாங்கள் சட்டப்படி சந்திக்கத் தயாராக இருக்கிறோம். அமலாக்கத்துறை கூறியதாகப் பேரவையில் பேசப்பட்டவையெல்லாம் வெறும் குற்றச்சாட்டுகளே தவிர, எதுவும் நிரூபிக்கப்படவில்லை.”
சபாநாயகர் மீதான விமர்சனம்: “தமிழக முதல்வரின் பேச்சுக்குச் சபாநாயகர் முழுமையாக ஜால்ரா அடிக்கிறார். முதல்வர் பேசி முடித்ததும் விளக்கம் அளிக்க நமக்கு வாய்ப்பு தருவதாகக் கூறிய பேரவைத் தலைவர், ஒரு துண்டுச் சீட்டைப் பார்த்தவுடன் வாய்ப்பு தர மறுத்துவிட்டார்.”
சுரங்கப் பொறுப்பு குறித்த கேள்வி: “விஷ்ணு ரெட்டி, அவரின் மச்சான் சுஜய் ரெட்டி மற்றும் நண்பர் அணில் ரெட்டி ஆகியோருக்குச் சுரங்கங்கள் (Mines) தொடர்பான பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பிய உதயநிதி, அவர்கள் என்ன பொறுப்பில் இருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்களை விரைவில் வெளியிடுவோம்” என்றும் எச்சரித்தார்.
“அரசியலுக்கு வந்ததே ஒரு விபத்து”: “மிசா சட்டத்தைப் பற்றிப் பேச முதல்வருக்கு எந்த அருகதையும் இல்லை. திங்கள்கிழமை பதில் சொல்வதாகக் கூறிவிட்டு, இன்று மனப்பாடம் செய்து ஒப்புவித்தல் போட்டி போல பேரவையில் தவறான தகவல்களைப் பேசியுள்ளார். இவர் அரசியலுக்கு வந்ததே ஒரு விபத்து” எனத் தனது பேட்டியை முடித்தார்.
